முதலாம் சோமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரசன் ராஜராஜ நரேந்திரன் மகன் முதலாம் குலோத்துங்க சோழன் is correct.
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 13:
சில காலம் சோழர்களின் செல்வாக்கு வேங்கி, கலிங்கம் ஆகியவற்றின் மீது சற்று குறைந்திருந்தது. என்றாலும், கி.பி1054இல் சோழர்கள் படையெடுத்து சாளுக்கியருக்குப் பதிலளித்தனர். கொப்பள் (கொப்பம்) என்ற இடத்தில் நடந்த [[கொப்பம் போர்|கொப்பம் போரில்]] சோழ மன்னன் [[இராஜாதிராஜ சோழன்]] கொல்லப்பட்டான். இப்போரில் முதலாம் சோமேசுவரன் தனது சகோதரன் ஜெயசிம்மனை இழக்க வேண்டியிருந்தது. சோழ இளவரசன் [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திரன்]] (இராஜாதிராஜனின் தம்பி) மன்னனாக முடிசூடி மீண்டும் சாளுக்கிய படைகளை துரத்தியடித்தான். சாஸ்திரி அவர்கள் கூற்றின்படி சோழர்களின் தோல்வியை வெற்றியாக இரண்டாம் இராஜேந்திர சோழன் மாற்றினான். தனது வெற்றியின் சின்னமாக ஒரு வெற்றித் தூணை கொல்லாபுராவில் (தற்போதைய [[கோலாப்பூர்]] ) நிறுவி தனது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினான். சாளுக்கிய ராணிகள் சத்யாவதி, சங்கப்பாய் ஆகியோர் உட்பட சாளுக்கியரிடம் கைப்பற்றிய மிகுதியான செல்வங்களையும் கொண்டு வந்தான். கி.பி.1059லும் மோதல்கள் ஏற்பட்டன. இரண்டாம் ராஜேந்திர சோழனால் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டது. முதலாம் சோமேசுவன் இந்த வெற்றியைக் கொண்டாட அண்ணிகேரி (தற்போதைய [[தார்வாட் மாவட்டம்]]) என்ற இடத்தில் ஒரு கோயில் கட்டினான். எனினும், சென் கூற்றின்படி, கி.பி.1059இல் துங்கபத்ரை நதிக்கரையில் முடக்காறு போரில், முதலாம் சோமேசுவரன் மற்றொரு தோல்வியை சந்தித்தான்.<ref name="capital"/><ref name="bank">Sastri (1955), pp.168-169</ref><ref name="mani"/><ref name="zenith"/>
 
வேங்கியில் கி.பி.1061இல் [[கீழைச் சாளுக்கியர்|கீழைச் சாளுக்கிய]] மன்னன் இராஜராஜ நரேந்திரன் இறந்ததையடுத்து மீண்டும் அரியணை போட்டி வெடித்தது. முதலாம் சோமேசுவரன் இப்போது இரண்டாம் விஜயாதித்தனின் மகன் சக்கதிவர்மனை சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றான். இது கீழைச்சாளுக்கிய மன்னனாக தங்கள் இரத்த உறவை நியமிக்க விரும்பிய சோழர்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்தது. சோழர்கள் இறந்துபோன அரசன் ராஜராஜ நரேந்திரன் மகன் '''முதலாம்இளவரசன் குலோத்துங்க சோழன்'''இராஜேந்திரனை மன்னனாக்க விரும்பினர். இதனால் புதிய சோழ மன்னர் [[இரண்டாம் ராஜேந்திர சோழன்]] மேலைச் சாளுக்கியர் மீது பல தாக்குதல்களை நடத்தினான். இதில் முதன்மையானது கி.பி.1062இல் கூடலசங்கமம் (தற்போய சிமோகா மாவட்டத்தின் கூடலி என்ற சிற்றூராக இருக்கலாம்) என்ற இடத்தில் நடத்திய பெரிய போராகும். இப்போரில் முதலாம் சோமேசுவரனை சோழர்கள் தோற்கடித்தனர். வரலாற்றாசிரியர்கள் சோப்ரா மற்றும் பலர், இந்த கூடலசங்கமம் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருப்பது என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில், முதலாம் சோமேசுவரன் இரண்டு படைகளைத் தனது மகன்கள் இளவரசர் ஆறாம் விக்ரமாதித்தன், ஜெயசிம்மன் ஆகியோர்கீழ் சோழர் ஆட்சியில் இருந்த கங்கப்பாடி மீதும் (மைசூரின் தெற்குப் பகுதி) தனது தளபதி சாமுண்டராயாவின் கீழ் மற்றொரு படையையும் அனுப்பினான். எனினும், இரண்டாம் இராஜேந்திரன் இந்த இரு படைகளையும் தோற்கடித்தான். இதன் பிறகு இரண்டாம் இராஜேந்திரன் இறந்த காரணத்தாலும் அவனது மகன் இராஜமகேந்திரன் அவனுக்கு முன்னே இறந்துவிட்டதினால். கி.பி.1063, இரண்டாம் இராஜேந்திரனின் தம்பியான [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.<ref name="capital"/><ref name="bank"/><ref name="mani"/><ref name="zenith"/>
 
==கூடலசங்கமம் இறுதிப் போர்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சோமேசுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது