"கலப்புக் கோட்டுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,790 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:ColoredMixed.png|thumbnail|கலப்புக் கோட்டுரு நிறந்தீட்டல்]]
அருகிலுள்ள படத்தில் ஒரு கலப்புக் கோட்டுருவின் முனைகளுக்கு எண்கள் தரப்பட்டு நிறந்தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டுருவிற்கு நிறந்தீட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட எண்கள் <math>\{1,2,3\}</math>. <math>u</math> மற்றும் <math>v</math> முனைகள் விளிம்பால் இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கு மாறுபட்ட நிறங்கள் அல்லது எண்கள் அளிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு முறையே 1, 2 என்ற எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. <math>v</math> மற்றும் <math>w</math> இரண்டும் ஒரு வில்லால் இணைக்கப்பட்டுள்ளன. எனவே வால் முனைக்கு (<math>v</math>) சிறிய எண்ணும் தலைமுனைக்கு (<math>w</math>) பெரிய எண்ணும் அளிக்கப்பட வேண்டும். <math>v,</math> <math>w</math> இரண்டுக்கும் முறையே 2, 3 என்ற எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
 
=== நிறந்தீட்டல் இருத்தல்===
ஒரு கலப்புக் கோட்டுருவை நிறந்தீட்ட முடியலாம் அல்லது முடியாமலும் இருக்கலாம். ஒரு கலப்புக் கோட்டுருவில் திசையுள்ள சுழற்சிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே அக்கோட்டுருவிற்கு k-நிறந்தீட்டல் இருக்கும்.<ref name="Ries" /> அவ்வாறு ஒரு k-நிறந்தீட்டல் இருக்கும்பட்சத்தில் அக்கலப்புக் கோட்டுருவை முறையாக நிறந்தீட்டத் தேவைப்படும் k இன் மிகச்சிறிய மதிப்பு, கோட்டுருவின் [[நிற எண்]] எனப்படும். நிற எண்ணின் குறியீடு <math>\chi(G)</math> ஆகும்.<ref name="Ries" /> முறையாக k-நிறந்தீட்டக்கூடிய எண்ணிக்கையை k இன் பல்லுறுப்புக்கோவைச் சார்பாகக் காணலாம். இப்பல்லுறுப்புக்கோவை அக்கலப்புக் கோட்டுருவின் "நிறப் பல்லுறுப்புக்கோவை" என்றழைக்கப்படும்; இதன் குறியீடு <math>\chi_G(k)</math> ஆகும்.<ref name="BeckBladoCrawfordJeanLouisYoung" />
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3000355" இருந்து மீள்விக்கப்பட்டது