ஒவ்வாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: eu:Alergia
சிNo edit summary
வரிசை 1:
உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத எதுவாக இருப்பினும் '''ஒவ்வாமை எனப்ப்படும்'''. ஒவ்வாமை என்பது மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையாகும். சூழலில் இருக்கின்ற சில ஒவ்வாப்பொருட்களால் (allergens) ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. [[பூச்சி]]க்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும்.
 
ஒவ்வாமையால் அரிப்பு, தடிப்பு, மூக்கொழுகல், தும்மல், கண்களில் நீர்வழிதல் போன்ற விளைவுகள் சாதாரணமாக ஏற்படும். [[ஆஸ்துமா]] போன்ற உடல்நலக் கேட்டு நிலைகளுக்கு ஒவ்வாமையும் ஒரு பெருங்காரணமாக அமையும்.
வரிசை 15:
 
உணவு ஒவ்வாமையின் காரணமாக அடிவயிற்று வலி, வயிறு உப்புதல், வாந்தி, பேதி, சரும அரிப்பு, தோல் தடிப்பு போன்ற பல விளைவுகள் ஏற்படலாம். உணவு ஒவ்வாமையால் மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு. சில தீவிர நிலைகளில் குறையழுத்தம், [[கோமா]], மட்டுமின்றி சிலசமயம் இறப்புக்கும் காரணமாக அமையும். சருமத்தோடு தொடர்பு கொள்ளும் '''லேட்டெக்சு''' போன்ற பொருட்களாலும் சிலருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். இது பெரும்பாலும் அரிப்பு, தடிப்பு என்று வெளிப்படும்.
 
==முதல் உதவி==
ஒவ்வாமை ஏற்பட்ட ஒருவரை விரைவாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவரைப் பொதுவாக ‘ட’ வடிவில் இருத்தி எடுத்துச் செல்லவேண்டும்.
 
[[பகுப்பு:மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒவ்வாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது