இராசமோகன் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கட்டுரை இணைப்பு
வரிசை 1:
{{mergefrom|#வழிமாற்று [[இராசமோகன் காந்தி}}]]
{{Infobox officeholder
| name = ராஜ்மோகன் காந்தி
| image =Rajmohan Gandhi (1960).jpg
| caption = ராஜ்மோகன் காந்தி (1960)
| birth_date ={{birth date and age|1935|08|07|df=y}}<ref name="Jamnalal" />
| birth_place = [[புது தில்லி]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரிட்டிஷ் இந்தியா]]
| residence =
| death_date =
| death_place =
| office = [[நாடாளுமன்ற உறுப்பினர்]], [[மாநிலங்களவை]]<ref>{{cite web | url=http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/g.pdf | title=Rajya Sabha members biographical sketches 1952 - 2003 | publisher=[[ மாநிலங்களவை]] | accessdate=4 September 2017}}</ref>
| constituency = [[உத்தரப் பிரதேசம்]]
| term =1990-92
| predecessor =
| successor =
| office1 =
| constituency1 =
| term1 =
| predecessor1 =
| successor1 =
| party = [[ஜனதா தளம்]]
|otherparty =[[ஆம் ஆத்மி கட்சி]]
|occupation = [[வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்]], [[பத்திரிக்கையாளர்]]
| spouse =உஷா காந்தி
| children =2
| parents =[[தேவ்தாஸ் காந்தி]]<br/>லக்‌ஷ்மி காந்தி
|awards=சர்வதேச மனிதாபிமான விருது(மனித உரிமைகள்)
| website ={{URL||http://www.rajmohangandhi.com}}
| footnotes =
| date = |
| year = |
| source =
}}
'''ராஜ்மோகன் காந்தி''' (பிறப்பு 7 ஆகத்து 1935)<ref name="Jamnalal">{{cite web|title=Professor Rajmohan Gandhi|url=http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/2015/chief-guest/rajmohan-gandhi|website=Jamnalal Bajaj Foundation|publisher=Jamnalal Bajaj Foundation|accessdate=4 January 2017|archiveurl=https://web.archive.org/web/20160313182730/http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/2015/chief-guest/rajmohan-gandhi|archivedate=13 March 2016|url-status=live}}</ref> ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மற்றும் தெற்காசிய மற்றும் மத்தியக் கிழக்கு பற்றிய படிப்புக்கான, ஆய்வுப் பேராசிரியர், [[இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)| இலினொய் பல்கலைக்கழகம்]], அமெரிக்க ஐக்கிய நாடுகள். இவர், [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி |மகாத்மா காந்தி]] மற்றும் [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி]] ஆகியோரின் பேரன் ஆவார். இவர் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர்|இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகரில்]] உள்ளுறை அறிஞராகவும் உள்ளார்.
 
==இளமைக்கால வாழ்க்கை==
இவரது தந்தை, மகாத்மா காந்தியின் மகனான, [[தேவ்தாஸ் காந்தி]], [[ஹிந்துஸ்த்தான் டைமஸ்]]-இன் மேலாண் ஆசிரியராக இருந்தார். ராஜ்மோகன் காந்தி தில்லியில் புனித ஸ்டீபன் கல்லூரியில் பயின்றார். இவரது தாழ்வழித் தாத்தா, லார்டு லூயிஸ் மவுண்ட் பேட்டனை அடுத்து இந்தியாவின் இரண்டாவது [[இந்தியத் தலைமை ஆளுநர்|கவர்னர் ஜெனரலாக]] இருந்தவரும் மகாத்மா காந்தியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் ஒருவருமான [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி]].
== கல்வித்துறை வேலை மற்றும் செயற்பாட்டாளர் பணி==
“Initiatives of Change” (முந்தைய பெயர் ‘Moral Re-Armament”), என்ற அமைப்புடன் 1956 இல் இருந்து இணைந்துள்ள ராஜ்மோகன் காந்தி, அரை நூற்றாண்டு காலமாக அவ்வமைப்பின் முயற்சிகளான நம்பிக்கை-உருவாக்குதல், நல்லிணக்கம், மக்களாட்சி மற்றும் ஊழலுக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார்.{{சான்று தேவை|date=September 2019}}
 
1960கள் மற்றும் தொடக்க 1970களில், ‘மாற்றத்திற்கான முனையம்’(Initiatives of Change)-இன் ’ஆசிய பீடபூமி’ என்ற பெயரிலான மாநாட்டு மையத்தை மேற்குமலைத் தொடரில் உள்ள [[பஞ்ச்கனி| பஞ்ச்கனியில்]] அமைப்பதில் தலைமைப் பங்கு வகித்தார்.<ref>{{cite web|url=http://www.in.iofc.org/ap |title=Initiatives of Change |website= www.in.iofc.org |archiveurl=https://web.archive.org/web/20070223075109/http://in.iofc.org/ap |archivedate=23 February 2007 |accessdate=2017-10-21 }}</ref> ’ஆசிய பீடபூமி’ இந்தியத் துணைகண்டத்தில் சூழியல் பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். 1975-1977 இடைப்பட்ட காலத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)| நெருக்கடி நிலையின்]] போது மனித உரிமைகளுக்காக தனிப்பட்ட முறையிலும் தனது வார இதழான, ''ஹிம்மத்'' இன் மூலமும் செயல்பட்டார். ஹிம்மத் 1964 முதல் 1981 வரை [[மும்பை|மும்பையில்]] இருந்து பதிப்பிக்கப்பட்ட ஒரு இதழ். {{சான்று தேவை|date=September 2019}}
 
இவரது புத்தகம், ''இரு கிளர்ச்சிகளின் கதை: 1857 இந்தியச் சுதந்திரப் போர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர்'' (A Tale of Two Revolts: India 1857 & the American Civil War (New Delhi: Penguin India, December 2009) ), 19-ஆம் நூற்றாண்டில் உலகின் எதிரெதிர் நிலப்பகுதிகளில் சற்றேறத்தாழ ஒரே காலகட்டத்தில் நடந்த இரு போர்களை ஆராய்கிறது. இவரது முந்தைய புத்தகமான, தனது தாத்தாவான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி |மகாத்மா காந்தியின்]] வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான ''மோகன்தாசு: ஒரு மனிதன், அவரது மக்கள் மற்றும் ஒரு பேரரசின் உண்மைக் கதை'' (Mohandas: A True Story of a Man, His People and an Empire), மதிப்புமிக்க ஈராண்டுக்கொருமுறை விருதை [[இந்திய வரலாற்று காங்கிரஸ்]] அமைப்பிடமிருந்து 2007-ஆம் ஆண்டில் பெற்றது.{{மேற்கோள் தேவை|date=October 2017}} விருது பெற்றதைத் தொடர்ந்து அப்புத்தகம் பல நாடுகளில் பதிப்பிக்கப்பட்டது.{{சான்று தேவை|date=September 2019}}
 
2002 இல், ராஜ்மோகன் காந்தி [[சாகித்திய அகாதமி விருது| சாகித்திய அகாதமி விருதை]] தனது தாத்தாவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் [[இந்தியத் தலைமை ஆளுநர்|கவர்னர் ஜெனரலுமான (1948–1950)]] [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] (1878–1972) வாழ்க்கை வரலாற்றுப் பற்றி, தான் எழுதிய புத்தகமான ''ராஜாஜி: ஒரு வாழ்க்கை'' (Rajaji: A Life) எனும் நூலுக்காகப் பெற்றார்.<ref name="southasia.uchicago.edu">See [https://southasia.uchicago.edu/node/344028 "Discussion of Modern South India: A History from the 17th Century to Our Times"]</ref>
 
இவரது பிற நூல்களுள் சில: ''[[கான் அப்துல் கப்பார் கான்]]: வன்முறையற்ற [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பாதுஷா''; ''பழிவாங்கல் & நல்லிணக்கத்தை மீட்டல்: தெற்காசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்''; இந்தியத் துணைப் பிரதமராக 1947-50 இல் இருந்த [[வல்லபாய் பட்டேல்| வல்லபாய் பட்டேல்(1875–1950)]] அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான '' பட்டேல்: ஒரு வாழ்க்கை''; மற்றும் ''எட்டு உயிர்கள்: இந்து-முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு''. துவக்க காலங்களில் இவர் எழுதிய புத்தகங்களுள் ஒன்றான ''நல்ல படகோட்டி: காந்தியின் ஒரு சித்திரம்'', சீன மொழியில் 2009-ஆம் ஆண்டு [[பெய்ஜிங்| பெய்ஜிங்கில்]] வெளியிடப்பட்டது. மிகச் சமீபமாக, ராஜ்மோகன் காந்தி, ''பஞ்சாப்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூல், [[ஔரங்கசீப்|ஔரங்கசீப்பின்]] இறப்புக்குப் பின்னிருந்து [[இந்தியப் பிரிப்பு | இந்தியப் பிரிவினை]] வரையிலான காலத்திய பிரிவுபடாத பஞ்சாபின் வரலாற்றைப் பேசும் நூலாகும்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/books/life-of-letters/article4034454.ece|title=Life of letters|publisher= The Hindu|date=26 October 2012}}</ref>
 
[[இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)| இலினொய் பல்கலைக்கழகத்தில்]] கற்பிக்கும் முன்னர் [[புது தில்லி|புது தில்லியில்]] இயங்கும் [[மதியுரையகம்|ஆய்வமைப்பான]], “கொள்கை ஆராய்ச்சி மையம்”( Centre for Policy Research)-இல் ஆய்வுப் பேராசிரியாகப் பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை, ''[[இந்தியன் எக்சுபிரசு| இந்தியன் எக்சுபிரசுவில்]]'' பதிப்பாசிரியாராகச் சென்னையில் இருந்து பணியாற்றினார். 2004 இல் சர்வதேச மனிதாபிமான விருதை(மனித உரிமைகள்)ப் பெற்றார். மேலும், 1997 இல், கனடா நாட்டுப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றான கால்கரி பல்கலைக் கழகத்தில் இருந்து சட்டத்துறையில் [[மதிப்புறு முனைவர் பட்டம்| மதிப்புறு முனைவர் பட்டமும்]], ஜப்பானியப் பல்கலைக்கழகமான Obirin University, Tokyo விடமிருந்து தத்துவவியலில் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றார். ராஜ்மோகன் தற்போது ஜெர்மனியில் இருந்து வழங்கப்படும் [[நியூரம்பெர்க் சர்வதேச மனித உரிமை விருது]]க்கு நபர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராகவும், ’உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை மீட்டல் மையம்’-இன் இணைத் தலைவராகவும் உள்ளார்.<ref name="southasia.uchicago.edu"/>
 
==அரசியல்==
1989 [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|மக்களவைத் தேரதலில்]], [[ராஜீவ் காந்தி| ராஜீவ் காந்தியை]] எதிர்த்து [[அமேதி]] தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 1990-92 இல் [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்தபோது [[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்| ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்]] பங்கேற்ற இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டுக்குழுவை ஒழுங்கு செய்பவராக மக்களைவை மற்றும் மாநிலங்களையில் செயலாற்றினார்.
 
21 பிப்ரவரி 2014 இல் [[ஆம் ஆத்மி கட்சி |ஆம் ஆத்மி கட்சியில்]] இணைந்தார்.<ref>{{cite news|title=Mahatma's grandson Rajmohan Gandhi joins AAP, will contest from east Delhi|url=http://ibnlive.in.com/news/mahatmas-grandson-rajmohan-gandhi-joins-aap-may-contest-from-delhi/453374-37-64.html|publisher=IBN Live|date= 21 February 2014}}</ref> 2014 பொதுத்தேர்தலில் [[கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி | கிழக்கு தில்லி தொகுதியில்]] போட்டியிட்டுத் தோற்றார்.<ref>{{cite news | url = http://www.thehindubusinessline.com/news/politics/aap-to-field-rajmohan-gandhi-from-east-delhi/article5732494.ece | title = Rajmohan Gandhi to lead AAP battle in Delhi East | date = 2014-02-27 | newspaper = The Hindu }}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ராஜ்மோகன் காந்தியின் மனைவியின் பெயர் உஷா. சுப்ரியா மற்றும் தேவதத்தா அவர்களது குழந்தைகள்.<ref>{{cite web|title = Short Biography -Rajmohan Gandhi|url = http://www.rajmohangandhi.com/short-biography|accessdate = 22 February 2014}}</ref>
 
==நூல்கள்==
# ''ஏன் காந்தி இன்றும் முக்கியாகிறார்? : காந்தியவாததின் இன்றைய மதிப்பீடு''
# ''தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களைப் புரிந்து கொள்ளுதல்: இந்தியக்குடியரசின் ஆரம்பகாலங்களை பற்றிய தேடுதல்''
# ''பஞ்சாப்: ஔரங்கசீப் முதல் மவுண்ட்பேட்டன் வரை ஒரு வரலாறு''
# ''இரு கிளர்ச்சிகளின் கதை: 1857 இந்தியச் சுதந்திரப் போர் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர்''
# ''மோகன்தாசு: ஒரு மனிதன், அவரது மக்கள் மற்றும் ஒரு பேரரசின் உண்மைக் கதை''
# ''[[கான் அப்துல் கப்பார் கான்]]: வன்முறையற்ற [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பாதுஷா''
# ''முஸ்லிம் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல்'' (Understanding the Muslim Mind)
# ''ராஜாஜி: ஒரு வாழ்க்கை''
# ''பழிவாங்கல் & நல்லிணக்கத்தை மீட்டல்: தெற்காசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்''
# ''நல்ல படகோட்டி: காந்தியின் ஒரு சித்திரம்''
# ''பட்டேல்: ஒரு வாழ்க்கை''
# ''எட்டு உயிர்கள்: இந்து-முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு''(Eight Lives: A Study of the Hindu-Muslim Encounter)
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://rajmohangandhi.com ராஜ்மோகன் காந்தியின் இணையதளம்]
* Crossette, Barbara, [https://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE7D9103BF93AA15753C1A96F948260 "In an Impatient Pocket of Rural India, Gandhi Fights for His Political Future"], Special to ''The New York Times'' Sunday, 29 October 1989
* Gandhi, Rajmohan, [http://rediff.co.in/news/oct/31raj.htm Biographical Essay on C. Rajagopalachari]
 
{{Authority control}}
 
[[Category:1935 பிறப்புகள்]]
[[Category:ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்]]
[[Category:தில்லி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராசமோகன்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது