நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 81:
 
கந்தசஷ்டி நாட்களில் சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த புராண படனம் நடைபெறும் . காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தம்பு, விசுவலிங்கம் சுப்பிரமணியம்,  சொக்கநாதர்கார்த்திகேயன், தாமோதரம் வேலுப்பிள்ளை ஆகியோர் இசையோடு பாடிபொருள் கூறியதை என்றும் மறக்க முடியாது என்று இங்கே கூறுகின்றனர்.
 
=== நிற்சிங்கமல்லன் ஆலயம் ===
சந்தியில் இருந்து கிழக்கு திசை நோக்கி போவது கேரதீவுவீதி. முன்னாளில் இது பிரதான வீதியாகவும் பூநகரிக்கு தரை வழிபாதையாகவும் இருந்ததாக கூறுவர். கேரதீவு வீதிக்கு வடபுறம் இருந்து பார்க்கும் போது கற்குவியல் ஒன்று இருந்தது. இப்போது அது தெரியவில்லை.  பற்றைகள் வளர்ந்து மூடிவிட்டன. அக்கற்குவியல் இருக்கும் இடத்திலே நிற்சிங்கமல்லனுக்கு நினைவாலயம் எழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆலயமாக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன . வெள்ளி, செவ்வாய் தோறும் விளக்கேற்றுதல் பூசை முதலியன நடந்தன . மாட்டுவண்டியில் புதுப்பானை பொங்கல்சாமானுடன் வந்து எம்மூரவர்கள் பொங்கி படையல் செய்தது நாற்பதுகளில் முதியோர் கண்டதாக கூறப்படுகிறது.
 
நிற்சிங்கமல்லன் ஆலயத்துக்கு அருகில் காணப்படுவது  "ஆயிலிப்பிட்டி " கேரதீவு வீதியில் மிக உயரமான இடம் இது தான். ஏன் நாவற்குழியிலும் சரி இதுவே பெரும்பிட்டி. இரண்டு பெரிய ஆலமரங்கள் வீதியோரம் நின்று நிழல் கொடுத்தவை தறிக்கப்பட்டுவிட்டன.  
 
அதனை அடுத்து மேற்கு நோக்கி சென்றால் மக்கள் செறிந்து வாழும் இடம். வீதியின் இரு மருங்கிலும் வீடுகளையும் வீட்டு முகப்பினில் பூத்துக்குலுங்கும் மரம் செடிகளையும்  காணமுடியும்.
 
=== கவிஞர் அம்பி மற்றும் எழுத்தாளர் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை ===
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது