திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg with File:Om_symbol.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
 
== திரெளபதி அம்மன் கோயில்கள் ==
துயர் தீர்க்கும் திரௌபதி அம்மன் ஆலயம்...
{{main|திரௌபதியம்மன்}}
 
[[File:Draupati Amman idol in Udappu.jpg|right|thumb|150px|[[இலங்கை]] [[உடப்பு]] கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில்]]
பக்தியுடன்...மாங்காடு ப.மணிவண்ணன்   பலராமன் (வேங்காகவுண்டர் வகையறா அரும்பாக்கம் தி.மலை)
 
மகாபாரதத்தின் நாயகி திரௌபதி. துருபதன் என்ற மன்னன் பாஞ்சாலதேசத்தில் நல்லாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் தோன்றினார்கள். மகனுக்கு துஷ்டத்துய்மன் என்றும், மகளுக்கு திரௌபதி என்றும் யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி, யாகஜனனி, யாகசாலை என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் பெயரிட்டார்.
 
         திரௌபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறு பிறவியில் காசி ராஜனுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவள் முன் தோன்றினார்.
 
‘பெண்ணே, உன் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார் சிவபெருமான்.
 
ஈசனைக் கண்ட மகிழ்விலும், பதற்றத்திலும், அவள் தன்னை மறந்து ‘பதம் தேஹி’ (கணவன்) என ஐந்து முறை கூறினாள்.
 
‘மறுபிறவியில் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்’ என அருள்புரிந்து மறைந்தார் ஈசன். அதன்படியே துருபதன் நடத்திய வேள்வியில் திரௌபதியாக உருக்கொண்டாள்.
 
கன்னிப் பருவம் அடைந்ததும். திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாஞ்சால அரசன் துருபதன் விதித்த விதிகளை அருச்சுனன் மட்டுமே நிறைவேற்றி திரெளபதியை சுயம்வரத்தில் வென்றான்.  பின், அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களும் குந்திதேவியை சந்திக்கச் சென்றனர். பஞ்ச பாண்டவர்கள் வீட்டில் வாசலில் நின்றபடி, ‘தாயே! கனி கொண்டு வந்துள்ளோம்’ என குந்தியிடம் கூற, குந்தியும் திரும்பி பாராது ‘பகிர்ந்து உண்ணுங்கள்’ என்றாள். பின் கனிக்குப் பதிலாக திரௌபதி இருப்பதைக் கண்ட குந்திதேவி பதறினாள்.
 
அப்போது குந்தியின் முன் தோன்றிய நாரதர், ‘திரௌபதி முற்பிறவியில் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ முகங்களும் அவளுக்கு கணவர்களாக இப்போது வாய்த்துள்ளனர்’ என்றார்.
 
திரௌபதியும் ஐவரையும் சிவ சக்தியாக மணந்து பராசத்தியாக வாழ்ந்தாள்.
 
பாரதப்போர் நடந்து கொண்டிருந்த போது, கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு திரௌபதி காளியின் வடிவம் என்பதை உணர்த்தினார்.
 
தருமர் சூதாடி திரௌபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் பேச்சைக் கேட்டு, திரௌபதியை துகிலுரித்தான். சினம் கொண்டாள் திரௌபதி. ‘பாண்டவர்கள் கவுரவர்களை போரில் வென்ற பின்பே தன் கூந்தலை முடிவேன்’ என சபதம் செய்தாள். இப்படி தெய்வீக சக்தியாக வாழ்ந்த திரௌபதிக்கு, நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாதூரில்  உள்ள திருத்தலம்.
 
வருடா வருடம் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை வேங்காகவுண்டர் வகையறாவாள்  பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் கொண்டுவந்து அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
 
இந்த திருக்கோவில் சுமார் 500 ஆண்டு காலம் பழமைவாய்ந்தது தற்போது புது திருக்கோவில் கட்டப்படுள்ளது.
 
இவ்வம்மன் மழை பொழிவிக்கும் தெய்வமாகவும், குழந்தை வரம் தரும் தெய்வமாகவும்,திருமணதடை நீக்கும் தெய்வமாகவும், கொடிய ஏவல், சூனியம், துஸ்ட சக்திகளை விரட்டும் தெய்வமாகவும்.
 
துயர் தீர்க்கும் தெய்வமாகவும், அணைவருக்கும் கண்கண்ட தெய்வமாகவும் திரௌபதி அம்மன் போற்றப்படுகிறார்.[[File:Draupati Amman idol in Udappu.jpg|right|thumb|150px|[[இலங்கை]] [[உடப்பு]] கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில்]]
[[File:Reclining Draupadi, wife of the 5 Pandavs. Near Auroville2.jpg|right|thumb|150px|புதுச்சேரி, அரோவில் நகர் அருகே திரௌபதி கோயில்]]
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் [[இலங்கை|இலங்கையில்]] திரௌபதி அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. <ref>[https://www.google.co.in/search?q=draupadi+amman&espv=210&es_sm=93&tbm=isch&source=iu&imgil=XQ0eF2EWeudZ6M%253A%253Bhttps%253A%252F%252Fencrypted-tbn2.gstatic.com%252Fimages%253Fq%253Dtbn%253AANd9GcRKIYtHzyqlUeTcQjPdB5Di2xAQvlje--HqX0or0ZejRz0olXi3%253B1024%253B768%253BM_SnDXqeasiFrM%253Bhttp%25253A%25252F%25252Fen.wikipedia.org%25252Fwiki%25252FDraupadi&sa=X&ei=kMe1UvnEIsymrQf3-YCwBQ&ved=0CCoQ9QEwAA&biw=1024&bih=652#facrc=_&imgrc=XQ0eF2EWeudZ6M%3A%3BM_SnDXqeasiFrM%3Bhttp%253A%252F%252Fupload.wikimedia.org%252Fwikipedia%252Fcommons%252F7%252F71%252FReclining_Draupadi%252C_wife_of_the_5_Pandavs._Near_Auroville2.jpg%3Bhttp%253A%252F%252Fen.wikipedia.org%252Fwiki%252FDraupadi%3B1024%3B768]</ref>இவ்வம்மனுக்கான கோவில்களின் எண்ணிக்கை மிகக்குறைவெனினும் இவள் கோவில் கொண்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இவ்வன்னையை மிகவும் போற்றுவர். இலங்கையிலே இவ்வம்மன் மழை பொழிவிக்கும் தெய்வமாகவும் குழந்தை வரம் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது