மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
15 ஆம் நூற்றாண்டில் தோன்றி [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பரவிய [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சிப்]] பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே '''மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை''' (Renaissance architecture) எனப்படுகின்றது. [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசுக்]] காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.
 
இப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித [[அளவுவிகிதம்|அளவுவிகிதப்படி]] (proportions) அமைந்திருந்ததோடு, [[ரோமக் கட்டிடக்கலை|ரோமக் கட்டிடக்கலையின்]] உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், [[தூண்|தூண்களையும்]], [[சமச்சீர்|சமச்சீரான]] (symmetry) வடிவத்தையும் கொண்ட எளிமையான [[கட்டிடம்|கட்டிடங்களை]] இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், [[வடிவவியல்]] ரீதியில் சிறப்பாக அமைந்த [[வடிவமைப்பு|வடிவமைப்புகளும்]], [[அரைக் கோளம்|அரைக் கோள]] வடிவக் [[குவிமாடம்|குவிமாடங்களும்]] மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சிக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது