மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
இப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித [[அளவுவிகிதம்|அளவுவிகிதப்படி]] (proportions) அமைந்திருந்ததோடு, [[ரோமக் கட்டிடக்கலை|ரோமக் கட்டிடக்கலையின்]] உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், [[தூண்|தூண்களையும்]], [[சமச்சீர்|சமச்சீரான]] (symmetry) வடிவத்தையும் கொண்ட எளிமையான [[கட்டிடம்|கட்டிடங்களை]] இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், [[வடிவவியல்]] ரீதியில் சிறப்பாக அமைந்த [[வடிவமைப்பு|வடிவமைப்புகளும்]], [[அரைக் கோளம்|அரைக் கோள]] வடிவக் [[குவிமாடம்|குவிமாடங்களும்]] மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும்.
 
இந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[புளோரன்ஸ்|புளோரன்ஸிலும்]], மத்திய [[இத்தாலி|இத்தாலியிலும்]], மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது:
 
# [[லியோன் பட்டிஸ்டா அல்பர்ட்டி]] (Leone Battista Alberti) மற்றும் [[பிலிப்போ புரூணலெஸ்கி]] (Filippo Brunelleschi) ஆகியோரின் ஆரம்பகால மறுமலர்ச்சி,
# [[டொனாட்டோ பிரமண்டே]] (Donato Bramante) மற்றும் [[ராபேலோ சாண்டி|ராபேல்]] (Raphael) என்போரின் உயர் மறுமலர்ச்சி,
# [[மைக்கலாஞ்சலோ]], [[கியூலியோ ரொமானோ]], [[அண்ட்ரியா பல்லாடியோ]] போன்றோரின் ஆக்கங்களில் காணப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாங்குகள் சார்ந்த (Mannerist) போக்குகள், மற்றும்
# [[கியான் லொரென்சோ பெர்னினி]] என்பவரின் ஒருவித [[பரோக் கட்டிடக்கலை|பரோக்]] பாணி.
 
[[Image:Poznan ratusz.jpg|thumb|200px|left|[[பொஸ்னான்|பொஸ்னானின்]] நகர மண்டபம்]]
மறுமலர்ச்சிப் பாணியானது [[பிரான்ஸ்]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]], [[போலந்து]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் இது அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், [[காலநிலை|காலநிலைகளையும்]] அநுசரித்தே செல்லவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சிக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது