பேச்சு:ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சில கேள்விகள்
 
No edit summary
வரிசை 1:
இக் கட்டுரையில் அவதானம், அவதான நிலையம் என்னும் சொற்கள் 10 இடங்களுக்கு மேலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தமிழில் அவதானிப்பு, அவதானம் என்னும் சொற்கள் observation என்னும் சொல்லுக்கு இணையாக ஆளப்படுகின்றது என்று தெரிந்திருந்தாலும். இச்சொல்லின் பொருள் தெளிவாக என்னைப் போன்றவர்களுக்கு விளங்கவில்லை. அவ என்னும் முன்னொட்டு பொதுவாக ''கீழ்'' என்னும் பொருள் தருவதை ஒருவாறு பலரும் அறிந்திருக்கலாம் (அவரோகணம், அவப்பெயர், அவமானம், அவமதிப்பு, அவதாரம்.- அவதாரம் என்பது கீழிறங்கி வருதல்.). Observe என்பது காண்தல், உணர்தல், அறிதல், நோக்குதல், கண்டுபிடித்தல், உற்றறிதல், உற்றுநோக்குதல், பார்த்தல், கூர்ந்து பார்த்தல் (கூர்பார்வை) என்று பல பொருள்களை இடத்திற்கு ஏற்பத் தருவது. 'அபிள் என்பது புறவெளியில் உள்ள ஒரு கண். பல்வேறு மின்காந்த அலைகளை உணர்ந்து காணவல்ல விண்வெளி தொலைநோக்கி. எனவே Space Observatory என்பதை விண்வெளிக் ''கூர்பார்வை'' நிலையம். விண்வெளி கூர்பார்வையகம் என்பது போன்ற சொல்லால் அழைக்கலாமா? புற ஊதாக்கதிர்களை உணரவல்ல, காணவல்ல, உணர்ந்து பதிக்க வல்ல தொலைநோக்கி என்று இடத்திற்கு ஏற்றார்போல கூறலாமே. அவதான நிலையம் என்பது உண்மையிலேயே புரியவில்லை. ஆங்கிலச்சொல்லாகிய observe என்பதை நினைவுபடுத்திக்கொண்டால்தான் ஒருவாறு புரிகின்றது. --[[பயனர்:செல்வா|செல்வா]] 02:21, 19 அக்டோபர் 2008 (UTC)
 
சென்னை பல்கலைகழக லெக்சிகான் சொல்வதாவது:
1. அவதானி -த்தல் avatāṉi- : (page 152)
 
சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத் துக்கொண்டான். (W.)
 
*அவதானி¹-த்தல் avatāṉi-
, 11 v. tr. < id. 1. To recollect, reflect; நினைப்பூட்டிக்கொள்ளு தல். 2. To commit to memory, fix or retain in mind; மனத்திலமைத்தல்.
 
 
 
--------------------------------------------------------------------------------
2. அவதானி avatāṉi : (page 152)
 
reflect; நினைப்பூட்டிக்கொள்ளு தல். 2. To commit to memory, fix or retain in mind; மனத்திலமைத்தல். (விறலிவிடு 102.)
 
*அவதானி² avatāṉi
, n. < ava-dhānin. 1. Attentive person; கவனிப்புள்ளவன். 2. Title of one who is well versed in the Vēdas; வேதங் களில் தேர்ச்சிபெற்றவன்.
==========================================================
 
பொதுவாக கூர்ந்து கவனித்தல் என்ற பொருள்.
Return to "ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி" page.