விக்கிப்பீடியா:தும்பும் வாலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரைவு
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

12:52, 6 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

clock தொகுக்கப்படுகிறது

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி குறித்து வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டிருக்கிறோம். உள்ளடக்கங்களைப் பெருக்குதல், தரத்தை மேம்படுத்துதல், புதுப்பயனர்களை ஈர்த்தல், பங்களிப்பின் அளவைக் கூட்டுதல் முதலியவை இத்திட்டங்களின் நோக்கங்களாக இருந்திருக்கின்றன. இத்திட்டங்களுக்காக நாம் முன்வைக்கும் இலக்குகளும், திட்டத்தின் பயனை அளப்பதும் பலவேளைகளில் கூடுதல் நேரடிப் பயனை நோக்கியே இருந்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாக வேங்கைத்திட்டத்தில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முன்வைத்த தலைப்புகள் கூகுளில் மிகுதியாகத் தேடும் தலைப்புகளாக இருந்தன. அத்தலைப்புகளில் கட்டுரைகளில் எழுதுவதிலும், விரிவாக்குவதிலுமுள்ள நேரடிப்பயன் வெளிப்படையாகத் தெரிகிறது. இருப்பினும் பங்களிப்பாளர் விருப்பத்தலைப்புகளையும் நாம் இணைத்தோம். அதன் பயன் வேறு வகையினது. ஏற்னவே இருக்கும் பங்களிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆர்வூட்டும் தலைப்புகளாக இருப்பதே முதற்பயன். அவ்வாறு இருக்கும்போது நிறைய தகவல்களுடன், செரிவான கட்டுரைகளை எழுதுவர். தவிர தேடுபொறியில் தேடப்படும் தலைப்புகள் பலவேளைகளில் பரவலர் விருப்பத்துறைகளில் நிறைந்துள்ளன. இதனால் விக்கிப்பீடியாவின் பன்வகைமை குறையலாம்.

தடித்த தலைப்பகுதியும் நீண்ட வாற்பகுதியும் வெவ்வேறு அளவிலும் தன்மையிலும் பலனளிக்கலாம்.

இவற்றைத் தாண்டியும் ஒரு கோணமுள்ளது. பரவலர் தலைப்புகள் கூடுதல் பார்வையாளர்களை நமக்குப் பெற்றுத் தந்தாலும் பலதுறைகளிலும் எழுதும் ஆர்வமுள்ள தகைமைபெற்ற பங்களிப்பாளர்களை எந்த அளவுக்குக் கொண்டு வருமெனத் தெரியவில்லை. மாறாகச் சற்றுக் குறைவாகத் தேடும் தலைப்புகளெனினும் அவற்றில் ஆர்வமுள்ளோர் இங்கு வந்து தொடர்பங்களிப்பாளர்களாகும் வாய்ப்புக் கூடுதலாக இருக்கலாம். இதைச் சில தரவுகளைக் கொண்டு ஆய்வுசெய்து கண்டறியும் இத்திட்டத்தைத் தும்பும் வாலும் எனலாம். ஆங்கிலத்தில் Long tail என்ற புள்ளியியல் விளைவையொட்டியும் தும்பைவிட்டு வாலைப் பிடித்தல் என்ற சொலவடையைச் சுட்டியும் இத்திட்டத்தை தும்பும் வாலும் திட்டம் எனலாம். இவ்விரண்டும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவை.