பேச்சு:ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சில சொற்கள் பரிந்துரை.
No edit summary
வரிசை 27:
:: செல்வா, நான் அறிந்த வரையில் அவதானித்தல் என்றால் கவனித்தல் அல்லது ஆங்கிலத்தில் observe என்பதற்கு இணையான சொல்லாகவே ஈழ வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. செ.அ.முதலி தரும் பொருள் இங்கு பொருந்தாது. எப்படி இவ்வளவு பொருள் வித்தியாசம் வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:53, 19 அக்டோபர் 2008 (UTC)
 
:::செ.ப.பே. இலக்கியத்திருந்து உதாரணம் காட்டுகிரது. ஆனால் காலக்கட்டத்தில் சொற்களின் அர்த்தம் மாறுபடுகிறது. அதனால் தற்கால அர்த்தம் பழைய இலக்கிய அர்த்தம் போல் 100% இருக்காது. ஓரளவு தொடர்பு இருக்கும்.--{{unsigned|62.31.227.9}}
:::{{unsigned|62.31.227.9}}
::::இச் சொல் தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை. 50-60 மில்லியன் மக்களுக்கு விளங்காது. Observe என்பது காண்தல், உணர்தல், அறிதல், நோக்குதல், கண்டுபிடித்தல், உற்றறிதல், உற்றுநோக்குதல், பார்த்தல், கூர்ந்து பார்த்தல் போன்ற எத்தனையோ சொற்கள் இருக்கும் பொழுது ஏன் தவறான பொருள் தரும் வேற்றுமொழிச்சொல்லை ஆள்தல் வேண்டும்? நல்ல தமிழ்ச்சொல்லை ஆண்டால், பொருள் வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 22:51, 19 அக்டோபர் 2008 (UTC)
 
வரி 34 ⟶ 33:
::உங்களுக்கு மறுப்பு இல்லை என்றால், சில இடங்களில் நான் கட்டுரையில் மாற்றுகின்றேன். படித்துப் பாருங்கள், சரியாக இல்லை என்றால் உடனே நீக்கிவிடலாம். ''விண்வெளிப் பார்வையகம்'', ''விண்வெளிப் பார்வை நிலையம்'' என்றே கூறலாம். அல்லது ''விண்வெளிக் கூர்பார்வையகம்'' அல்லது ''விண்வெளிக் கூர்பார்வை நிலையம்'' எனலாம். ''கண்காணி'' என்னும் சொல் மேற்பார்வை இடுபவர்க்கு வழங்கும் சொல். oversee, supervise என்பதே பொருள். கண்காணிப்பவரை கண்காணி என்று கூறுவதால், காணி என்னும் சொல்லைப் பின்னொட்டாக வைத்து சொல் ஆக்கலாம். உற்று, உன்னிப்பாய் காண்பதால், உற்றுகாணி என்று கூட சொல்லலாம் (ஆனால் போதிய நிறைவு தருவதாக இல்லை). உற்றுநோக்கி என்றும் கூறலாம். எனவே ''விண்வெளி உற்றுகாண் நிலையம், விண்வெளி உற்றுநோக்கு நிலையம்'' என்றும் கூறலாம்.'' வானிலை அறிநிலையம்'' எனலாம். Observer என்பதற்கு முன்னொட்டு ஏதும் இல்லாமல் ''காணி'' என்றே கூறலாம். நடப்புகளை, நிகழ்வுகளைக் காண்பவரைக் ''காணி'' என்றே சுருக்கமாகக் கூறலாம். ''அரசியல் பார்வையாளர்கள்'' எனலாம் அல்லது ''அரசியல் காணிகள்'' என்றும் கூறலாம். கண்காணி என்னும் சொல்லும்கூட மேற்பார்வை என்னும் பொருளோடு, ''பொதுவாக கூர்ந்து காண்பவர்''என்னும் பொருளில், பொருள் நீட்சி ஊட்டி வழங்கலாம் என நினைக்கிறேன். ''கூர்காணி'' எனலாம். எ.கா: ''அவர் தன்னை அரசியல் கூர்காணி என்று சொல்லிக்கொள்கிறார், ஆனால் அரசு கவிழ இருப்பதை அவர் முன்கூட்டியே அறியவில்லை''. --[[பயனர்:செல்வா|செல்வா]] 22:51, 19 அக்டோபர் 2008 (UTC)
 
ஏற்கனவே உகந்த சொற்கள் இருக்கையில் ஏன் புதிதாக உருவாக்க வேண்டும். மயூரநாதன் குறிப்பிட்ட தளத்தில், அவதானி என்பதற்கு நோக்கர் என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது "கண்காணிப்பாளர்" எனலாம். அவர்களை வெறுமனே காணிகள் எனச் சொல்வது பொருந்தவில்லை (அல்லது அழகாக இல்லை). அவதானம் என்பது வடமொழி அடியில் இருந்து வராவிட்டால் observatory என்பதற்கு அவதான நிலையம் எனப் பாவிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? அல்லது "விண்வெளி கண்காணிப்பு நிலையம்" எனலாமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 23:30, 19 அக்டோபர் 2008 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
 
 
 
Return to "ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி" page.