கிருஷ்ண ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வட இந்தியாவில்: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎தென்னிந்தியாவில்: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 24:
'''ராச லீலா''' மற்றும் '''தகி அண்டி''' (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது<ref>{{cite news|url=http://www.mid-day.com/news/2008/aug/240808-janmashtami-celebrated.htm|title=Janmashtami celebrated with zeal, enthusiasm|work=Mid Day|date=August 24, 2008|accessdate=2009-08-12}}</ref>.
 
=== தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி ===
[[படிமம்:Krishna Jayanthi festival.jpg|thumb|right|தென்னிந்திய வீடு ஒன்றில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப் படுகிறது.]]
 
*தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 
*கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகசிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
 
*கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ண_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது