கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,067 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
மேம்படுத்துதல்
(மேம்படுத்துதல்)
அடையாளம்: 2017 source edit
(மேம்படுத்துதல்)
அடையாளம்: 2017 source edit
பிராமணர் வேடமிட்ட இந்திரன் தெய்வீக கவசத்தையும் குண்டலத்தையும் தந்திரமாக கர்ணனிடமிருந்து எடுத்துச் செல்லும் சதித்திட்டத்தின் சூத்திரதாரி புத்திசாலித்தனமான [[கிருஷ்ணர்|கிருஷ்ணரால்]] என்பதை கர்ணன் புரிந்துகொண்டு தனது தலைவிதியை ஏற்றுக்கொள்கிறார். இந்திரனின் தூதர் விமலா என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை வழங்குகிறார். இது பாண்டவர்களில் ஒருவரை அழிக்கக்கூடும். அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணரிடமிருந்து வந்த சவாலை ஏற்றுக்கொண்டு புத்துயிர் பெற்ற கர்ணன் இந்த இறுதி விதியை வீரமாக தொடர்கிறான். இத்துடன் ''பாசா''வின் கர்ணபாரம் நாடகம் முடிவடைகிறது.
 
==வியாசரின் மகாபாரதத்திலிருந்து விலகல்==
இந்த நாடகம் அசல் மகாபாரதத்திலிருந்து சில முக்கிய காரனங்களுக்காக பல விலகல்களைக் கொண்டுள்ளது.
* இந்த நாடகம் கர்ணனுக்கும் அவரது தேரோட்டி சல்லியனுக்கும் இடையிலான நட்பு உரையாடலால் வகைப்படுத்தப்படுகிறது. சல்லியன் தொடர்ந்து கர்ணனிடம் பரிவு காட்டுகிறார். மேலும் அவரது நலன்களைப் பற்றியும் கவலைப்படுகிறார். பிராமணர் தோற்றமுள்ள அந்நியருக்கு தனது கவசத்தையும் காதணிகளையும் கொடுக்க வேண்டாம் என்று கர்ணனை எச்சரிக்கிறார்.
 
* அசல் கதையில், ஷால்யா மன்னனாகவும், பாண்டவர்களிடம் அனுதாபமாகவும் இருந்தார். சல்லியன் தனது தேரை ஓட்டிச் சென்றால் மட்டுமே கெளரவ இராணுவத்தின் தளபதியாவேன் என கர்ணன் சொன்னார். துர்யோதனனின் வேண்டுகோளை சல்லியனால் மறுக்க முடியவில்லை. எனவே, ஒரு நிபந்தனையை விதிக்கிறான். அதன்படி, கர்ணன் அவனிடம் என்ன சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல மாட்டேன். கர்ணன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
 
* போர்க்களத்தில் சல்லியன் தொடர்ந்து கர்ணனை விமர்சிக்கிறான். அவனுடைய தாழ்ந்த பிறப்பு மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட பிற தோல்விகளை நினைவுபடுத்துகிறான். மஹாபாரதத்தின் கர்ணன் (கர்ணபர்வத்தில்) சல்லியனை கடுமையாக விமர்சித்தாலும் தைரியமாக போராடுகிறார். கர்ணபாரத்தில் சல்லியன் கர்ணனின் கூட்டாளியாகக் காட்டப்படுகிறான்.
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019209" இருந்து மீள்விக்கப்பட்டது