அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நவீன அரபி: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
→ஆரம்பகால அரபி மொழி: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 47:
==ஆரம்பகால அரபி மொழி ==
ஆரம்பகாலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இருக்கவில்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பையும் கொண்டுள்ளன. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருப்பதால், அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசி, மற்றும் குர்ஆனையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குர்ஆன் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும், இதை مثل (மஸல) அல்லது مبل (மபல) அல்லது متل (மதல) அல்லது منل (மனல) அல்லது ميل (மயல) என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இவை அனைத்தும் ஒரே வித வடிவமைப்பை கொண்டுள்ளன: புள்ளிகளை வைத்துத்தான் எழுத்துகளை இனங்காண முடிகிறது. இதை அரபியர்களால் சரியாகப் படிக்கமுடியும், அரபியர் அல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா}, அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளம் என்பது உதாரணத்திற்கும் தமிழில் (ெ)ஒற்றை கொம்பு, (ே)இரட்டை கொம்பு, (ா)துணைக்கால் போன்ற உயிர் மெய் அடையாளங்களை வைத்துத்தான் கா என்றும், கி என்றும், கே என்றும் அடையாளபடுத்தி
== அரபு மொழி ஒலிப்பு ==
|