வட ஆற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
2409:4072:491:8B73:601B:9979:5CBD:6D99 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3023723 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 36:
'''வட ஆற்காடு மாவட்டம்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய [[மாவட்டம்]] (ஜில்லா) ஆகும்.
 
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு|ஆற்காடு (Arcot)]] இருந்தது. இந்நகரம் இன்று [[வேலூர்]] மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாப்கள்]] ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]] என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1901 ஆம் ஆண்டு சித்தூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டு வந்த போது [[வேலூர்]], [[ஆற்காடு]],செய்யாறு, [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[குடியாத்தம்]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]] ஆகிய வட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்திய விடுதலைக்கு பின்னர் வடாற்காடு ஜில்லாவில் இருந்து 1950 களில், சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு எல்லைகளை மறுசீரமைத்து [[வேலூர்|வேலூரை]] தலைமையிடமாக கொண்டு பழைய வட்டங்களை கொண்டும் மற்றும் புதிய வட்டங்களை உருவாக்கியும் வட ஆற்காடு மாவட்டம் செயல்பட்டது. அதாவது, [[ஆற்காடு]], [[வேலூர்]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]], [[செங்கம்]], [[திருவண்ணாமலை]], [[வந்தவாசி]], [[திருவத்திபுரம்]], [[குடியாத்தம்]], [[அரக்கோணம்]], [[திருப்பத்தூர்]], ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி வருவாய் கோட்டங்களான செய்யாறு, [[திருப்பத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[இராணிப்பேட்டை]], [[வேலூர்]] நிர்வாக வசதிக்காக உருவாக்கி செயல்பட்டு வந்தது. மீண்டும் 1989இல் வடாற்காடு மாவட்டமானது வடாற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று :[[திருவண்ணாமலை மாவட்டம்]] ) வடாற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:[[வேலூர் மாவட்டம்]]) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மேலும் நிர்வாக வசதிக்காக [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தை]] ஆகஸ்டு 15 2019 ஆம் ஆண்டு [[திருப்பத்தூர் மாவட்டம்]] மற்றும் [[இராணிப்பேட்டை மாவட்டம்]] என பிரிக்கப்பட்டுள்ளது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வட_ஆற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது