ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வாழ்க்கைக் குறிப்பு: அம்மா பெயர் கஸ்தூரி,அக்கா பெயர் ஏ.ஆர். ரெய்கானா, அக்கா மகன் பெயர் ஜி.வி.பிரகாஷ்(நடிகர்),பாத்திமா, இஷ்ரத் தங்கை உண்டு.சகலை ரகுமான் இவர் சங்கமம் நடிகர் ஆவார்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யில் பிறந்தவர். '''அருணாச்சலம் சேகர் திலீப் குமார்''' என்பது இவரது இயற்பெயர் ஆகும்.அம்மா பெயர் கஸ்தூரி.அக்கா பெயர் ஏ.ஆர்.ரெய்கானா.அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ்(நடிகர்).தங்கை பாத்திமா,இஷ்ரத் மற்றும் சகலை ரகுமான்(நடிகர்).இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் [[இசை]] சார்ந்தது. இவரின் தந்தை சேகர் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் [[பியானோ]], [[ஆர்மோனியம்]] மற்றும் [[கித்தார்]] வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் [[இளையராஜா]] இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் [[எம். எஸ். விஸ்வநாதன்]], ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் [[குன்னக்குடி வைத்தியநாதன்]] உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
 
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் [[மின்சார கனவு|மின்சாரக் கனவு]]ம், [[2002]] லகான் இந்தி படமும், 2003-இல் [[கன்னத்தில் முத்தமிட்டால்]] படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது