ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:

==உயிர் வருக்கம்==
1.{{green|அறஞ் செய விரும்பு}}

:அறம் - ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச்  செய்யாமல் இருப்பது ) செய - செய்வதற்கு,
:விரும்பு -நீ ஆசைப்படு.
:*தருமம் செய்ய நீ விரும்புவாயாக
:*நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.
2. {{green|ஆறுவது சினம்}}

:ஆறுவது- தவிர்க்க வேண்டியது,
:சினம் - கோபம்.
:*கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
:*கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.
3. {{green|இயல்வது கரவேல்}}

:இயல்வது - நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு
:கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)
:*உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. {{green|ஈவது விலக்கேல்}}

:ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை
:விலக்கேல் - நீ தடுக்காதே
:*ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
5. {{green|உடையது விளம்பேல்}}

:உடையது - உனக்கு உள்ள பொருளை
:விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே
வரிசை 41:
:*உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.
:*உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
6. {{green|ஊக்கமது கைவிடேல்}}

:ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை
:கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.
:*எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. {{green|எண் எழுத்து இகழேல்}}

:எண் – கணித நூலையும்
:எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்
:*எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. {{green|ஏற்பது இகழ்ச்சி}}

:ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.
:*இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. {{green|ஐயம் இட்டு உண்}}

:ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து
:உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.
:*யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10. {{green|ஒப்புரவு ஒழுகு}}

:ஒப்புரவு – உலக போக்கிற்கு எற்றவாறு;
:ஒழுகு – நட
:*உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. {{green|ஓதுவது ஒழியேல்}}

:*நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. {{green|ஔவியம் பேசேல்}}

:*ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13. {{green|அஃகஞ் சுருக்கேல்}}

:*அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது