ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
==உயிர்மெய் வருக்கம்==

14.{{green|கண்டொன்று சொல்லேல்.}}

:*கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.{{green|ஙப் போல் வளை.}}

:*''''ங'''' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
*"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.{{green|சனி நீராடு.}}

* சனி(குளிர்ந்த) நீராடு.
17.{{green|ஞயம்பட உரை.}}

:* கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18.{{green|இடம்பட வீடு எடேல்.}}

:* உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.{{green|இணக்கம் அறிந்து இணங்கு.}}

:* ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.{{green|தந்தை தாய்ப் பேண்.}}

:* உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.{{green|நன்றி மறவேல்.}}

:* ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.{{green|பருவத்தே பயிர் செய்.}}

:* எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.{{green|மண் பறித்து உண்ணேல்.}}

:* பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
:* நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.{{green|இயல்பு அலாதன செய்யேல்.}}

:* நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.{{green|அரவம் ஆட்டேல்.}}

:* பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.{{green|இலவம் பஞ்சில் துயில்.}}

:* 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27.{{green|வஞ்சகம் பேசேல்.}}

:* கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28.{{green|அழகு அலாதன செய்யேல்.}}

:* இழிவான செயல்களை செய்யாதே

29.{{green|இளமையில் கல்.}}

:* இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை ('''இலக்கணத்தையும், கணிதத்தையு'''ம்) தவறாமல் கற்றுக்கொள்.

30.{{green|அறனை மறவேல்.}}

:* கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31.{{green|அனந்தல் ஆடேல்.}}

:* மிகுதியாக தூங்காதே

"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது