மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 93:
[[File:Terken-Khatun-Captive-Initi.gif|"துருக்கியர்களின் அரசி" என்றழைக்கப்படும் குவாரசமியப் பேரரசின் பேரரசி டெர்கென் கதுன் மங்கோலிய ராணுவத்தால் கைதியாக பிடிக்கப்படுதல்.|thumb]]
ஊர்கெஞ்ச் தாக்குதலானது மங்கோலியப் படையெடுப்புகளிலேயே மிகுந்த சிக்கலான யுத்தமாக உருவானது. நகரமானது அமு தரியா ஆற்றின் பக்கவாட்டில் ஒரு சதுப்பு நில டெல்டா பகுதியில் கட்டப்பட்டிருந்தது. மென்மையான தரையானது முற்றுகைப் போருக்கு ஒத்ததாக இல்லை. மேலும் கவன் வில்களுக்கு ஏற்றவாறு பெரிய கற்கள் அப்பகுதியில் இல்லை. இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மங்கோலியர்கள் தாக்குதலை தொடங்கினர். பாதுகாப்பு படையினர் பகுதி பகுதியாக சண்டையிட்டனர். பாதுகாப்பு படையினரின் ஒரு கடினமான எதிர்ப்பிற்கு பிறகே நகரமானது வீழ்ந்தது. நகர்ப்புற சண்டைக்கு மங்கோலிய உத்திகள் பொருந்தாத காரணத்தால் மங்கோலிய இறப்புகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
 
ஊர்கெஞ்சை வெல்வதானது கான் மற்றும் அவரது மூத்த மகன் சூச்சி ஆகிய இருவருக்கும் இடையிலான தொடர் பிரச்சனைகளால் கடினமானது. சூச்சிக்கு இந்நகரம் பரிசாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. சூச்சிக்கும் அவரது மற்ற மூன்று சகோதரர்களுக்கும் ஒரே தாய் தான். அவர் செங்கிஸ் கானின் மனைவியான போர்ட்டே. போர்ட்டேயின் மகன்கள் மட்டுமே செங்கிஸ் கானின் அதிகாரப்பூர்வ மகன்கள் மற்றும் ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்களாக எண்ணப்பட்டனர். கானின் மற்ற 500 மனைவியரின் வழித்தோன்றல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் சூச்சியின் பிறப்பானது சர்ச்சைக்குரியதாக இருந்தது. கான் அதிகாரம் நிறைந்தவராக வளர்ந்து வந்த காலத்தின் ஆரம்பங்களில் போர்ட்டே கடத்தப்பட்டார். கைதியாக இருந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 9 மாதங்கள் கழித்து சூச்சி பிறந்தார். செங்கிஸ் கான் சூச்சியை தனது மூத்த மகனாக ஏற்றுக்கொண்ட போதிலும் சூச்சியின் உண்மையான தந்தை யார் என்பதை பற்றிய கேள்விகள் எப்பொழுதுமே எழுந்தன.<ref name=Nicolle>Nicolle, David. ''The Mongol Warlords''</ref>{{full citation needed|date=March 2018}}
 
==உசாத்துணை==