சோழர் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
இந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்காமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன.
 
முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதாலாம்முதலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது. இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழாகீய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும்.
 
== வண்ண ஓவியம் ==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது