மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 110:
===மெர்வ்===
டொலுயின் ராணுவத்திற்கு வீழ்ந்த முக்கிய நகரம் மெர்வ் ஆகும். ஜுவய்னி மெர்வை பற்றி எழுதியதாவது: "குராசானின் நிலப்பகுதிகளிலேயே சிறந்த பகுதியாக இருந்தது. அமைதி மற்றும் பாதுகாப்பு பறவையானது அதன் எல்லைகளுக்கு மேல் பறந்தது. அங்கிருந்த தலைவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மழை துளிகளுடன் போட்டியிட்டது. அதன் நிலமானது சொர்க்கத்துடன் போட்டியிட்டது."<ref name="Stubbs"/> மெர்வின் கோட்டை காவல் படையினரின் எண்ணிக்கை வெறும் 12,000 வீரர்களே ஆவர். மேலும் நகரமானது கிழக்குப் பகுதியில் இருந்த குவாரசமியாவில் இருந்து வந்த அகதிகளால் நிரம்பியது. முதல் 6 நாட்களுக்கு டொலுய் நகரத்தை முற்றுகையிட்டார். ஏழாம் நாள் நகரத்தை தாக்க ஆரம்பித்தார். எனினும் கோட்டை காவல் படையினர் தாக்குதலை முறியடித்து, மங்கோலியர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அதே முறையில் கோட்டை காவல்படையினர் நகரத்திற்குள் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் உயிருடன் வாழ அனுமதிக்கப்படுவர் என்ற டொலுயின் வாக்குறுதி அடிப்படையில் நகரத்தின் ஆளுநர் நகரத்தை சரணடைய வைத்தார். ஆனால் நகரம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே சரணடைந்த ஒவ்வொருவரையும் டொலுய் கொல்ல ஆரம்பித்தார். ஊர்கெஞ்ச் படுகொலையை விட மெர்வ் படுகொலையானது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
===நிஷாபூர்===
மெர்வை முடித்துக்கொண்ட டொலுய் மேற்கு நோக்கி பயணித்தார். நிஷாபூர் மற்றும் ஹெராத் ஆகிய நகரங்களை தாக்கினார்.<ref>[http://users.erols.com/mwhite28/warstat0.htm#Mongol Mongol Conquests]</ref> மூன்றே நாட்களில் நிஷாபூர் வீழ்ந்தது. இங்கு செங்கிஸ்கானின் மருமகனான தோகுசர் யுத்தத்தில் மரணம் அடைந்தார். நகரத்தில் இருந்த பூனைகள் மற்றும் நாய்கள் உட்பட அனைத்து உயிர்களும் டொலுயின் வாளுக்கு இறையாயின. தோகுசரின் விதவை படுகொலைக்கு தலைமை தாங்கினார்.<ref name="Stubbs"/> நிஷாபூர் வீழ்ந்த பிறகு ஹெராத் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதனால் மக்கள் உயிர் தப்பினர்.
 
==உசாத்துணை==