மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 125:
 
குவாரசமியா உடனான போரானது செங்கிஸ்கானுக்கு அடுத்து யார் மன்னன் என்ற முக்கியமான கேள்வியையும் கொண்டு வந்தது. போர் ஆரம்பித்த பொழுது செங்கிஸ் இளமைப் பருவத்தில் இல்லை. அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அனைவருமே ஆக்ரோசமான போர் வீரர்கள். ஒவ்வொருவரும் விசுவாசமான ஆதரவாளர்களை தங்களுக்கென கொண்டிருந்தனர். இவ்வாறான உடன்பிறப்புகளுக்கு இடையேயான பிரச்சனையானது ஊர்கெஞ்ச் முற்றுகையின் போது கிட்டத்தட்ட வெளிப்பட்டுவிட்டது. அந்த யுத்தத்தை முடிக்க செங்கிஸ் தனது மூன்றாவது மகன் ஒகோடியை சார்ந்திருக்க வேண்டிய நிலைமைக்கு கட்டாயப்படுத்தப்பட்டார். ஊர்கெஞ்ச் அழிவிற்குப் பிறகு செங்கிஸ் அதிகாரப்பூர்வமாக தனது மகன் ஒகோடியை தனக்கு அடுத்த கானாக தேர்ந்தெடுத்தார். மேலும் எதிர்கால கான்கள் முந்தைய ஆட்சியாளர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பார்கள் எனவும் ஒரு வழிமுறையை நிறுவினார். இவ்வாறாக நிறுவப்பட்ட பின்னரும் நான்கு மகன்களுக்கு இடையிலும் இறுதியாக பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினைகள் செங்கிஸ் உருவாக்கிய கானரசின் நிலையற்ற தன்மையை வெளிக்காட்டியது.
 
சூச்சி தனது தந்தையை மன்னிக்கவில்லை. மேற்கொண்ட மங்கோலிய போர்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். வடக்கு நோக்கிச் சென்றார். தனது தந்தை அவரை காண வருமாறு அழைத்த போது வர மறுத்துவிட்டார்.<ref name="Nicolle"/> சூச்சி இறந்த நேரத்தில் கான் தனது எதிர்ப்பு குணம் கொண்ட மகன் மீது போர் தொடுக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் சூச்சியின் மகன்களிடம் வெளிப்பட்டன. குறிப்பாக படு மற்றும் பெர்கே கான் ஆகியோரிடம் வெளிப்பட்டன.<ref name="Chambers"/> எகிப்திய மம்லுக்குகள் 1260 ஆம் ஆண்டு ஐன் ஜலுட் யுத்தத்தில் மங்கோலியர்களுக்கு வரலாற்றின் மிக முக்கியமான தோல்வியை கொடுத்தபோது ஹுலாகு கானால் அந்த தோல்விக்கு பழி தீர்க்க முடியவில்லை. ஹுலாகுவின் உறவினரான இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெர்கே திரான்ஸ்காக்கேசியா பகுதியில் இஸ்லாமுக்கு ஆதரவாக ஹுலாகுவை தாக்கினார். மங்கோலியர்கள் மங்கோலியர்களுடன் முதன்முதலாக யுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த யுத்தத்தின் விதைகளானவை அவர்களது தந்தைகள் குவாரசமிய போரில் ஈடுபட்ட போது உருவாயின.<ref name="Morgan"/>
 
==உசாத்துணை==