கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
இந்து அறநிலையத்துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36,488 கோயில்கள் உள்ளன. [[பொது ஊழி|பொது ஊழிக்கு முன்னர்]] எழுதப்பட்ட [[சங்க இலக்கியம்]], [[தமிழகம்|தமிழகத்தின்]] ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற [[சைவ சமயம்|சைவ]] [[நாயன்மார்]] மற்றும் [[வைணவ சமயம்|வைணவ]] ஆழ்வார்களின் பாடல்கள் அந்தக் கால கோவில்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்கல்வெட்டுகள் பல்வேறு அரசர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை விவரிக்கின்றன.
 
மிகவும் பழமையான கோயில்கள் மரம் மற்றும் செங்கல் போன்றவற்றால் கட்டப்பட்டன .[https://www.thehindu.com/2005/09/21/stories/2005092104692000.htm] . ஏறக்குறைய கி.பி. 700 காலக் கோயில்கள் பெரும்பாலும் பாறைகளில் வெட்டப்பட்டதாக, குடையபட்டதாக இருந்தன. [[பல்லவர்|பல்லவ]] மன்னர்கள் கல்லில் கோயில்களைக் கட்டியவர்கள். [[சோழர்|சோழ மன்னர்கள்]] (பொ.ச. 850-1279) [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] உள்ள [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|பெருவுடையார் கோயில்]] போன்ற பல கோயில்களைக் கட்டி எழுப்பினர். சோழர்கள் கோயில்களில் பல அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களையும், பெரிய கோபுரங்களையும் கட்டினர். [[பாண்டியர்|பாண்டிய]] பாணியில் (பொ.ச. 1350 வரை) பெரிய கோபுரங்கள், உயரமான மதில் சுவர்கள், மகத்தான கோபுர நுழைவாயில்கள் (இராசகோபுரங்கள்) தோன்றின. [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர்]] பாணியானது (பொ.ச. 1350 - 1560) சிக்கலான மற்றும் அழகுகாக செதுக்கபட்ட ஒற்றைக்கல் தூண்களுக்கு பிரபலமானது. [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்]] பாணி (பொ.ச. 1600 - 1750) பெரிய ''[[பிரகாரம்]]'' மற்றும் தூண் மண்டபங்களை சேர்த்ததாற்காக்க் குறிப்பிடப்படுகிறது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது