சிறுமுகை பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
== சிறுமுகைப்பட்டு ==
பட்டுச் சேலைகள் தயாரிப்பில் இன்று சிறுமுகை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. காஞ்சீபுரம்[[காஞ்சிபுரம்]], பனாரஸ், [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[கும்பகோணம்]] வரிசையில் சிறுமுகைப் பட்டு இன்று பிரசித்தி பெற்றுள்ளது. 1970 களில் சிறுமுகைப் பகுதியில் காட்டன் சேலைகள் தயாரிக்கப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பின் தங்கியே இருந்தது. இருப்பினும் இந்த தொழிலில் பெரும்பாலோனர் ஈடுபட்டிருந்தனர். வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்த காலகட்டங்களில் [[பெங்களூர்]], [[காஞ்சிபுரம்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] பகுதிகளில் பட்டுச் சேலை நெசவு பிரபலமாக இருந்தது.
 
அங்கு பட்டுச் சேலைகளை நெய்வதற்கு கூலி அதிகமாக இருந்துவந்தது. ஆகவே இங்கிருந்து கைதேர்ந்த நெசவாளர்கள் பெங்களூர் சென்று பட்டுச் சேலைத் தயாரிப்பில் ஈடுபட்டனர் மேலும் 1977 ல் முதன் முதலாக சிறுமுகைப் பகுதியில் பட்டுச் சேலை தயாரிப்பு அறிமுகப் படுத்தினர். மேலும் இப்பகுதியில் இருக்கும் மற்ற நெசவாளர்கள் அந்தத் தொழில்நுட்பத்தினைக் கற்றுக் கொண்டு, பட்டுச் சேலை நெய்யக் கற்றுக் கொண்டனர் இதே சமயத்தில் கோரா பட்டும் அறிமுகமானது. பட்டும் காட்டனும் இணைந்து தயாரிக்கப்பட்டதுதான் கோராப்பட்டு. இதன் மூலமாகக் கடினமாக உணரப்பட்ட இந்தத் தொழில்முறை எளிதானதாக மாற்றம் அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறுமுகை_பட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது