படிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 3:
'''படிகம்''' (crystal) என்பது அதனை உருவாக்கும் [[அணு|அணுக்கள்]], [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]], [[அயன்|அயன்கள்]] என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் [[முப்பரிமாணம்|முப்பரிமாணங்களிலும்]] நெருக்கமாக அமைந்துள்ள ஒரு [[திண்மம்|திண்மமாகும்]]. படிகம் என்பதைப் '''பளிங்கு''' என்றும் சொல்வதுண்டு.
 
பொதுவாகத் [[திண்மமாதல்]] (solidification) செயற்பாட்டின் போதே படிகங்கள் உருவாகின்றன. ஒரு இலட்சிய நிலையில் விளைவு [[ஒற்றைப் படிகம்|ஒற்றைப் படிகமாக]] இருக்ககூடும். இந் நிலையில் திண்மத்திலுள்ள எல்லா அணுக்களும் ஒரே படிக அணிக்கோவையில் (crystal lattice) அல்லது படிக அமைப்பில் பொருந்துகின்றன. ஆனால் பொதுவாக ஒரே நேரத்தில் பல படிகங்கள் உருவாவதால் உருவாகும் திண்மங்கள் [[பல்படிகம்|பல்படிகத் தன்மை]] (polycrystalline) கொண்டவையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் உலோகங்களிற்உலோகங்களில் பெரும்பாலானவை பல்படிகங்களாகும்.
 
திரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் [[திரவம்|திரவத்தின்]] [[வேதியியல்]] தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் [[அமுக்கம்|அமுக்கத்திலும்]] தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் [[படிகமாதல்]] (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/படிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது