சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
வரிகளில் சிறு மாற்றம்
சி (வரிகளில் சிறு மாற்றம்)
சி (வரிகளில் சிறு மாற்றம்)
முழுமையான கமர்ஷியல் படங்களுக்கும் மாசாலா திணிப்புகளுக்கும் சமரசம் அடையாத இயக்குநர் சீனுராமசாமி, மக்களின் ரசனைகளுக்கு நான் காட்சிகளை வைப்பதில்லை மக்களின் தேவைகளுக்கு தான் காட்சி அமைக்கின்றேன் என்று ஊடக நேர்காணல்களில் உறுதியாக பதிவு செய்கிறார்.
 
கூடல்நகர் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு 2012ம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் நீர்ப்பறவை படம் வெளியானது '''விஷ்ணு''', '''சுனைனா''', '''நந்திதா தாஸ்''', '''சரண்யா பொன்வண்ணன்''', '''சமுத்திரக்கனி''' மற்றும் பலர் நடித்திருந்தார்கள். எழுத்தாளர் '''ஜெயமோகன்''' கதை எழுதி இருந்தார், '''என்.ஆர்.ரகுநந்தன்''' இசையில் '''கவிப்பேரரசு வைரமுத்து''' பாடல் வரிகளை எழுதியிருந்தார், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இப்படம் வெளியானது. கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ சமுதாயங்களின் வாழ்வியலை சொன்ன இத்திரைப்படம் தமிழக மக்களிடம் பெரும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றது இன்று வரை தர்க்க விமர்சனத்தின் அடிப்படையில் ஊடகங்களிலும், வலை தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.   
 
2014ம் ஆண்டு இடம் பொருள் ஏவல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் '''எஸ்.ராமகிருஷ்ணன்''' அவர்கள் இதற்கு கதை எழுதியிருக்கிறார், '''இயக்குநர் லிங்குசாமி''' தயாரித்து இருக்கிறார் '''விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா''' மற்றும் பலர் நடித்துள்ளார்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளை எழுதியுள்ளார். '''யுவன் சங்கர் ராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் இப்படத்தில் முதல் முதலாக இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது'''. சீனுராமசாமி இயக்கத்தில் மலை வாழ் மக்களின் வாழ்வியலை சுமந்து வரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
 
 
'''தொடக்க காலம்                                                                                '''
 
இயக்குநர் சீனுராமசாமி தன் இளங்கலை(கணிதவியல்) படிப்பை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முடித்துள்ளார். நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி படிப்புகளை சார்லஸ் கான்வண்ட் திருநகர் மதுரை, சவிதாபாய்(கோவை) உயர்நிலை பள்ளி மற்றும் டி.வி.எஸ் சுந்தரம் ஐய்யங்கர் மேல்நிலை பள்ளி மதுரையில் முடித்துள்ளார். இவரின் சொந்த ஊரானா திருநகர் பற்றி '''என் ஊர்'''-'''உலகின் சிறந்த பாதை!''' என்ற தலைப்பில் 2012ம் வருடம் '''ஆனந்த விகடனில்''' ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார்.
 
இந்திய மற்றும் உலக சினிமா படங்களை பார்பதனாலும், இலக்கியம் மற்றும் நவீன இலக்கியங்களின் தொடர் வாசிப்புகளாலும் சினிமாவை நோக்கி உந்த பெற்ற இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் முன்னணி விளம்பர நிறுவனங்களில் உதவியாளராகவும் பின்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார் மற்றும் இயக்குநர் சீமான் அவர்களிடம் வீரநடை என்ற படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032364" இருந்து மீள்விக்கப்பட்டது