பராசக்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,009 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
== திரைக்கதை சுருக்கம் ==
தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம்  நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுகக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து மதுரைக்கும் செல்ல வழியின்றி பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, பாலகனைப் பெற்ற கல்யாணி கடன் பொருட்டு வீடும் இழந்து கைம்பெண்கள் சந்தித்த துயரத்தை எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.
 
== வகை ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032822" இருந்து மீள்விக்கப்பட்டது