அகோரநாத் சட்டோபத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
More details
more details
வரிசை 9:
 
ஹைதராபாத்தில் அகோரநாத் தனது அரசியல் செயல்பாட்டைத் தொடர்ந்தார், எனவே கூடிய சீக்கரம் ஓய்வு பெற்று கொல்கத்தாவுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரும் அவரது மனைவி வரதா சுந்தரி தேவியும் கொல்கத்தாவின் லவ்லாக் தெருவில் குடியிருப்பு அமைத்தனர்.
 
அகோரநாத் எடின்பர்க் செல்வதற்கு முன்பு வரதா சுந்தரி தேவியை மணந்தார். வரதா சுந்தரி, கேஷப் சந்திர சென் நடத்தும் கல்வி மையமான பாரத் ஆசிரமத்தில் மாணவியாகி தன் கல்வியைமுடித்தார் . அகோ ரநாத் திரும்பி வந்தபின் இருவரும் ஹைதராபாத்திற்கு 1878 இல் சென்றனர். தம்பதியருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. சரோஜினி மூத்தவர்.சரோஜினி நாயுடு தனது தந்தையை அளவில்லா ஆர்வம் கொண்ட புத்திஜீவி என்று விவரிக்கிறார். இந்த ஆர்வம்தான் தங்கத்திற்கான செய்முறையைத் தேடி அவரை ஆல்கெமிஸ்ட் ஆக மாற்றியது. "கோல்டன் த்ரெஷோல்ட்" என்ற கவிதைகளின் தொகுப்பை சரோஜினி வெளியிட்ட பிறகு, ஹைதராபாத்தில் அவர் குடும்பம் தங்கியிருந்த வீடு கோல்டன் த்ரெஷோல்ட் என்று அழைக்கப்பட்டது. இது தற்போது ஒரு அருங்காட்சியகம். இரண்டாவது மகள் மிருணாலினி கேம்பிரிட்ஜில் இருந்து தனது படிப்பை முடித்தார், பின்னர் லாகூரில் உள்ள கங்காரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் முதல்வரானார், இது இப்போது மகளிர்லாகூர் கல்லூரி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது மகள் சுநலினி ஒரு கதக் நடனக் கலைஞர். இளைய மகள் சுஹாசினி ஒரு அரசியல் ஆர்வலர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பெண் உறுப்பினர்.
 
அகோரநாத்தின் மூத்த மகன் வீரேந்திரநாத் ஒரு இடதுசாரி, புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரிட்டிஷ் குற்றப் பதிவேட்டில் இருந்தார். அவர் தனது நேரத்தை ஐரோப்பாவில் கழித்தார், ஆங்கிலேயர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவை சேகரித்தார். அவர் மாஸ்கோவில் தங்கியிருந்தபோது, ​​ஸ்டாலினின் பெரிய தூய்மைக்கு பலியானார், செப்டம்பர் 2, 1937 இல் தூக்கிலிடப்பட்டார். [12] இளைய மகன் ஹரிந்திரநாத் ஒரு ஆர்வலர், கவிஞர் மற்றும் நடிகர். அவர் 1973 இல் இந்திய சிவில் விருது பத்ம பூஷண் பெற்றார்.
 
இறுதி நாட்கள்
 
அகோரநாத் தனது லவ்லாக் சாலை இல்லத்தில் ஜனவரி 28, 1915 அன்று இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அகோரநாத்_சட்டோபத்யாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது