புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 103:
}}
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
'''புராத்து ஆறு''' ({{lang-ar|الفرات}}: ''al-Furāt'', {{lang-he|פרת}}: ''Prat'', {{lang-tr|Fırat}}, {{lang-ku|Firat}}) அல்லது '''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈfreɪtiːz||En-us-Euphrates.ogg}}, ''Euphrates'') , மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு [[ஆறு]] ஆகும். இப்பகுதியில் ஓடும் [[டைகிரிசு ஆறு|டைகிரிசு]] என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய [[மெசொப்பொத்தேமியா]]வை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, [[சிரியா]], [[ஈராக்]] ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, [[சாட்-அல்-அராப்]] (Shatt al-Arab) என்னும் ஆற்றின் ஊடாகப் [[பாரசீகக் குடா]]வில் கலக்கின்றது.
 
வரி 113 ⟶ 112:
== பாதை ==
[[காரா ஆறு|காரா சூ]] அல்லது மேற்கு இயூபிரட்டீசும் (450 கிலோமீட்டர் (280 மைல்)), [[மூரத் ஆறு|மூரத் சூ]] அல்லது கிழக்கு இயூபிரட்டீசும் (650 கிலோமீட்டர் (400 மைல்)) சந்திக்கும் இடத்திலிருந்து இயூபிரட்டீசு தொடங்குகிறது. இவ்விடம், துருக்கியில் உள்ள கெபான் என்னும் நகரத்தில் இருந்து, ஆற்றின் போக்குக்கு எதிர்த் திசையில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது. டவூடி, ஃபிரெங்கென் ஆகியோரின் கணக்கீட்டின் படி, மூரத் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து, இயூபிரட்டீசு ஆறு, டைகிரிசு ஆற்றுடன் இணையும் இடம் வரையிலான மொத்த நீளம் 3000 கிலோமீட்டர்கள் (1,900 மைல்கள்). இதில் 1,230 கிலோமீட்டர்கள் (760 மைல்கள்) துருக்கியின் எல்லைக்குள் உள்ளது. எஞ்சியதில் 710 (440 மைல்கள்) கிலோமீட்டர்கள் சிரியாவிலும், 1,060 கிலோமீட்டர்கள் (660 மைல்கள்) ஈராக்கிலும் உள்ளது. இயூபிரட்டீசு, டைகிரிசு ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து பாரசீகக்குடா வரையிலான ''சாட்-அல்-அராப்'' ஆற்றுப் பகுதியின் நீளத்தை பலரும் வெவ்வேறு அளவினதாகக் கணித்துள்ளனர். இக் கணிப்பீடுகள் 145 - 195 கிலோமீட்டர்கள் (90 - 121 மைல்கள்) வரையில் அமைகின்றன.
 
 
காரா சூ, மூரத் சூ ஆகிய ஆறுகள் வான் ஏரிக்கு வட மேற்கில் கடல்மட்டத்தில் இருந்து முறையே 3,290 மீட்டர் (10,790 அடி), 3,520 மீட்டர் (11,550 அடி) உயரங்களில் ஊற்றெடுக்கின்றன. இரண்டும் இணைந்து இயூபிரட்டீசு ஆனபின், கெபான் அணைக்கு அருகில் இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 693 மீட்டர்கள் (2,274 அடிகள்). கெபானில் இருந்து துருக்கி-சிரியா எல்லை வரையிலான 600 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், இந்த ஆறு இன்னொரு 368 மீட்டர்கள் (1,207 அடிகள்) இறங்குகிறது. இயூபிரட்டீசு, மேல் மெசொப்பொத்தேமியச் சமவெளிக்குள் புகுந்த பின்னர், இதன் உயர்வு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைகிறது. சிரியாவுக்குள் 163 மீட்டர்கள் (535 அடிகள்) வீழ்ச்சி ஏற்படுகின்றது. அதே வேளை ''இட்'' (Hīt) என்னும் நகரத்துக்கும், ''சாட்-அல்-அராப்'' ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றின் உயர மட்டம் 55 மீட்டர்கள் (180 அடி) மட்டுமே குறைகிறது.
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[டைகிரிசு ஆறு]]
* [[காபூர் ஆறு (புறாத்து ஆறு)|காபூர் ஆறு]]
* [[மெசொப்பொத்தேமியா]]
== குறிப்புகள் ==
{{reflist}}
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[டைகிரிசு ஆறு]]
* [[மெசொப்பொத்தேமியா]]
 
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
[[பகுப்பு:ஈராக்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்மெசொப்பொத்தேமியா]]
[[பகுப்பு:மத்திய கிழக்கின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/புறாத்து_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது