முரளி விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 103:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/100/100713/100713.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
<ref name=":0" />'''முரளி விஜய்''' ('''Murali Vijay''' (பி. ஏப்ரல் 1, 1984, [[சென்னை]]யில்) ஒரு இந்திய [[துடுப்பாட்டம்|கிரிக்கெட்]] வீரர். இவர் ஒரு வலது-கை மட்டையாளர்; துவக்க ஆட்டக்காரர். [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் , [[தமிழ்நாடு]] துடுப்பாட்ட அணிக்காகவும், [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டித் தொடர்களில் [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
 
முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக சில துடுப்பாட்டச் சங்கங்களின் சார்பாக விளையாடியுள்ளார். [[2006]] ஆம் ஆண்டில் தமிழ்நாடு ''சீனியர்'' அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். [[2006]]-[[2007]] ஆம் ஆண்டில் நடைபெற்ற [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக் கோப்பைத்]] தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் ஒருவரானார். [[அக்டோபர் 2008]] ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். [[நவம்பர் 2008]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அறிமுகமானார். [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]], [[கவுதம் கம்பீர்|கவுதம் கம்பீருக்கு]] ஓர் போட்டியில் விளையாடத் தடை விதித்ததால் அவருக்குப் பதிலாக துவக்க வீரராக களம் இறங்கினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.<ref name=":0">{{cite web|title=Murali Vijay|url=https://cricket.yahoo.com/player-profile/Murali-Vijay_4531|publisher=Yahoo Cricket|accessdate=17 December 2014}}</ref> [[2003]] ஆம் ஆண்டில் சென்னை, [[ஆழ்வார் பேட்டை]] துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார். பின் [[சீ. கே. நாயுடு]] கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தத் தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆனால் முரளி விஜய் சரியான ஆட்டத் திறனை இதில் வெளிப்படுத்தத் தவறினார். அவர் விளையாடிய 6 போட்டிகளிலும் சராசரியாக 26.45 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.<ref>{{cite web|title=Batting and Fielding for Tamil Nadu Under-22s in CK Nayudu Trophy 2004/05|url=https://cricketarchive.com/Archive/Events/7/CK_Nayudu_Trophy_2004-05/Tamil_Nadu_Under-22s_Batting.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref> அதன் பின்பும் சில துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். [[2005]]-[[2006]] ஆம் ஆண்டிற்கான [[சீ. கே. நாயுடு]] கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 26.50 சராசரி ஓட்டங்களைப் பெற்றார்.<ref>{{cite web|title=Batting and Fielding for Tamil Nadu Under-22s in CK Nayudu Trophy 2005/06|url=https://cricketarchive.com/Archive/Events/7/CK_Nayudu_Trophy_2005-06/Tamil_Nadu_Under-22s_Batting.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref>
 
இந்தத் தொடரில் சரியான திறனை வெளிபடுத்தத் தவறினாலும் இவருக்கு [[பெப்ரவரி 2006]] ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் [[ரஞ்சிக் கோப்பை]] போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் கிடைத்தது. [[பெப்ரவரி 16]] அன்று [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 17 ஓட்டங்கள் எடுத்தார்.<ref>{{cite web|title=Karnataka v Tamil Nadu in 2005/06|url=https://cricketarchive.com/Archive/Scorecards/84/84958.html|publisher=CricketArchive|accessdate=17 December 2014}}</ref> பின் இரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.<ref>{{cite web|title=Railways v Tamil Nadu in 2005/06|url=https://cricketarchive.com/Archive/Scorecards/86/86159.html|accessdate=17 December 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முரளி_விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது