சலில் சௌதுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 71:
 
== தமிழ்த் திரைப்படங்களில் சவுதிரி ==
சலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்தார். [[செம்மீன் (திரைப்படம்)|செம்மீன்]] இயக்குநரான [[ராமுகாரியட்]] தன் கரும்பு என்ற தமிழ் படத்துக்கு இசையமைக்க 1972 ல் சலீல் சௌதுரிவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள 'திங்கள் மாலை வெண்குடை' 'கண்ணே கண்மணியே' போன்ற பாடல்கள் எழுபதுகளில் [[இலங்கை வானொலி]]யில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் [[கமலஹாசன்கமல்ஹாசன்]] நடித்த மலையாள படமான மதனோத்சவம் தமிழில் பருவமழை[[பருவ மழை (திரைப்படம்)|பருவ மழை]] என்றபேரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலீல் சௌதுரியின் 'மாடப்புறாவே வா' ' தேன்மலர் கன்னிகள் ' 'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே செங்கதிர்' போன்ற அரிய மெட்டுகள் இங்கே பிரபலமடைந்தன.
 
1977 ல் [[பாலுமகேந்திரா]] கன்னடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கோகிலா படத்தை இயக்கியபோது அதற்கு சலீல் சௌதுரி இசையமைத்தார். அவர் 1979ல் [[அழியாத கோலங்களைகோலங்கள்]] தமிழில் இயக்கியபோது சலீல் சௌதுரி அதற்கும் இசையமைத்தார். அதில் உள்ள ' பூ வண்ணம் போல நெஞ்சம்' 'நாள் எண்ணும் பொழுது' போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=91007 |title=பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர் |date=7 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[தினமலர்]]}}</ref>
1980ல் சலீல் சௌதுரி இசையமைத்த '[[தூரத்து இடிமுழக்கம்]]' அவரது கடைசி தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள் புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால் அம்மா' 'செவ்வெள்ளிபூவே' 'வலையேந்திச் செல்வோம்' ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப்பாடலான 'There is a rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கிலப்பாடலை சலீல் சௌதுரியே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்றபாடல்தான் தமிழில் சலீல் சௌதுரியின் சிறந்த பாடல் எனலாம். ஆனால் அன்றைய சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும்கொண்ட சலீல் சௌதுரியின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நேரடிப்பங்களிப்புத் தமிழில் குறைவே.
"https://ta.wikipedia.org/wiki/சலில்_சௌதுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது