பவுலோ கோய்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வார்ப்புரு ரசவாதீ
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| noicon=on
}}
'''பவுலோ கோய்லோ''' (''Paulo coelho'') (பிறப்பு: [[ஆகஸ்ட் 24]], [[1947]]) உலகப் புகழ்பெற்ற சமகால [[பிரேசில்]] நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவின் மினிட்ஸ் (''Eleven Minutes'') என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்<ref name= Paulo>Paulo Coelho, "Eleven Minutes", 2003</ref>. இவரது ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' புதினம் தமிழில் ![[ரசவாதி]] என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
==ரசவாதி கதைச்சுருக்கம்==
சந்தியாகு என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு குழந்தை இவனை பிரமிடுகளுக்கு அழைத்துப் போவதாக கனவு காண்கிறான். அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் சூனியக்காரியிடம் கேட்கிறான். அவள் அறிவுறுத்த அதன்படி செல்லும் அவன் மெல்ஜிசெடக் எனும் பெரியவரை இடையில் சந்திக்கிறான். சேலம் ராஜாவான அவர் 'கனவுகளையும் குறியீட்டுச் சகுனங்களையும் நம்பு. பிரபஞ்சத்தின் மொழியை அறிந்து கொள். உன் இலக்கை நீ அடைவாய்' என்கிறார். அதனை ஏற்று பொக்கிஷத்தைத் தேடிச் செல்கிறான் சந்தியாகு. ஸ்பெயினில் இருந்து கிளம்பும் அவன் தனது ஆடுகளை விற்று பணம் பெற்று தன் இலக்கை நோக்கி விரைகிறான். டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. அவரது வழிகாட்டுதலின்படி பிரமிடுகளை அடைகிறான். அங்கே அவன் தேடி வந்த பொக்கிஷம் கிடைத்ததா? இலக்கை அடைந்தானா என்பதே கதையின் முடிவாகும் <ref>ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்</ref>
"https://ta.wikipedia.org/wiki/பவுலோ_கோய்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது