காஞ்சி மணிமொழியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==பதிப்பாளர்==
காஞ்சி மணிமொழியார், 1947 ஆகஸ்டு 16 ஆம் நாள் "போர்வாள்" வார இதழை தொடங்கினார், இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். <ref> " தலையங்க இலக்கியம் " ஆசிரியர் மா. இளஞ்செழியன், "போர்வாள்", முதல் தலையங்கம், 16.8.1947.</ref> . 1947 ஆகஸ்டு 16 முதல் ஆகஸ்டு 8, 1954 வரை ஏழு ஆண்டுகளும், சிறிய  இடைவெளிக்கு பிறகு, ஜனவரி 5, 1957 முதல் மே 3, 1958 வரை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தில் போர்வாள் இதழ் வெளிவந்தது. "உண்மையை ஓளிக்காது எடுத்துச் சொல்வதே நமது இலட்சியம். அது யாருக்கு எவ்வளவு குமட்டலாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பட்டாங்கு உரைக்கும் நேரிய வழி ஒன்றுதான் நமக்கு தெரியும். அது ஒன்றே போதும். புத்துலகப் பாடையில் தமிழகத்தைச் செலுத்தும் சீரிய பணியை மேற்போட்டுக் கொண்டுள்ள நமக்கு வேறு வழிகள் ஏனோ ?" என்கிற இவ் வாக்கியங்கள் அந்தப் பத்திரிகையின் முதல் இதழ் தலையங்கத்தில் காணப்பட்டவையாகும். <ref> " தலையங்க இலக்கியம் " ஆசிரியர் மா. இளஞ்செழியன், "போர்வாள்" பத்திரிகையில் எழுதப்பட்ட சிறப்பான 30 தலையங்கங்கள் அடங்கிய புத்தகம். </ref><ref> "இதழாளர் இளஞ்செழியன்" - நூல் ஆசிரியர் டாக்டர் தொ. சின்னபழனி; சௌபாக்கியம் பதிப்பகம், 2008,chapter 4, பக்கம் 68, 69. </ref>. <ref> https://twitter.com/kryes/status/820155369599238144 </ref> 1947 முதல் 1949 வரை திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டதிலிருந்து அந்தக் கழகத்தின் செழிப்புக்காகவும், "போர்வாள்" சிறப்பாக பணியாற்றியிருக்கிறது. 1948ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வளர்ப்பதற்காக சிறந்த எழுத்தோவியங்களை வழங்கியது. எழில் குலுங்கும் மலர்களை வெளியிட ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரால் நடத்தப்பட்ட பத்திரிகைகளால் மட்டுமே முடியும் என்ற நிலையை மாற்றி பலப்பல மலர்களை சிறந்த முறையில் வெளியிட்டது. அவற்றுள் சில - பெரியார் பிறந்த நாள் மலர் (1947 செப்டம்பர் ), பொங்கல் மலர்கள் (1948, 1951, 1958), திமுக முதலாண்டு நிறைவு மலர்(1950),
 
பத்திரிகை நடத்துவதில் இளமைப் பருவத்திலிருந்தே நிறைந்த ஆர்வம் இருந்ததால் அதில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்தார். 1924-27ஆம் ஆண்டுகளில் வாலாஜா பாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே காஞ்சிபுரம் யுனைடெட் அச்சகத்தில் நடத்தப்பட்ட "பாரதம்" என்னும் திங்கள் இதழின் ஆசிரியராக இருந்து திறம்பட நடத்தினார்.1929 முதல் "செங்குந்த மித்திரன் " திங்கள் இதழின் துணையாசிரியராகவும், 1934 முதல் அதன் ஆசிரியராகவும் அந்த இதழை பதினைந்து ஆண்டுகள் ஏற்றம்மிகு முறையில் நடத்தியவர் மணிமொழியார். 1937ல் அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு "நவயுகம்" என்னும் வார இதழை நடத்திய பெருமையும் சிறப்பும் மணிமொழியாருக்கு உண்டு. அறிஞர் அண்ணா ஆற்றல் மிக்க ஓர் எழுத்துச் சிற்பியும் ஆவார் என்பதை உணர்ந்து அவருக்கு வாய்ப்பை முதன் முதலில் அளித்தது அந்த ஏடே ஆகும்.<ref>[[:wikisource:ta:இதழியல் கலை அன்றும் இன்றும்/சமுதாய விடுதலைப்]]</ref>
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_மணிமொழியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது