காஞ்சி மணிமொழியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
"போர்வாள்" கிழமை இதழைத் தமிழகமே வியந்து போற்றும் முறையில் சிறப்பாக நடத்திவந்த அதே சமயத்தில் "பகுத்தறிவு பாசறை" என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பெருந்துணை புரியவல்ல அருந்தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட்டார். "பகுத்தறிவு பாசறை"ல் வெளியிடப்பட்ட நூல்கள் சில - பேராசிரியர் க. அன்பழகன் இயற்றிய "வகுப்புரிமைப் போராட்டம் ", இராதாமணாளன் இயற்றிய "மனப்புயல்", "இளவரசி", "தேன்மொழி", "புதுவெள்ளம்", "பொற்சிலை", பேராசிரியர் மா. இளஞ்செழியன் இயற்றிய "தமிழன் தொடுத்த போர்", "ஈரோட்டு பாதை", "அறிஞர் அண்ணாதுரை", இந்திய அரசியல் சட்டம்". <ref> "வாழ்க்கை பாதை", ஆசிரியர் மா. இளஞ்செழியன், தன் வரலாற்று நூல். முதல் தொகுதி</ref> அறிஞர் அண்ணாதுரை எழுதிய "அண்ணா கண்ட தியாகராயர்" <ref> https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7l0I0#book1/ </ref>
 
மணிமொழியார் பதிப்பாளராக செய்த மற்றொரு புதுமை, "திராவிடர் நாட்குறிப்பு" என்னும் டைரியை வெளியிட்டதாகும். 1950 முதல் 1958 வரை, வெளியிடப்பட்டுவந்த நாட்குறிப்பில் - திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்டங்கள், சொற்பொழிவாளர்களின் முகவரிகள், திமுக பற்றிய தொகுப்பு நூலாக அது விளங்கி வந்தது. மேலும் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் அமுத மொழிகளையும், உலக அறிஞர்கள் பொன்மொழிகளையும், ஒரு நாளைக்கு ஒன்று என்னும் முறையில் அளித்து, அறிவுக்கருவூலமாகவும் அது திகழ்ந்தது.<ref> https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_(1956).pdf/223 </ref>
 
==செங்குந்த சமூக தொண்டு==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_மணிமொழியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது