இங்மார் பேர்ஜ்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''ஏண்ஸ்ட் இங்மார் பேர்ஜ்மன்''' (Ernst Ingmar Bergman - 14 ஜூலை 1918 – 30 ஜூலை 2007) ஒன்பது தடவைகள் [[அக்கடமி விருது]]க்கு நியமிக்கப்பட்ட சுவீடிய, [[திரைப்படம்|திரைப்பட]], [[மேடை நாடகம்|மேடை நாடக]], ஒப்பேரா [[இயக்குனர்]] ஆவார். மனித நிலைமைகள் பற்றிய தேடுதல்களில், ஊக்கமின்மை, மனக்கசப்பு, [[நகைச்சுவை]], நம்பிக்கை போன்ற பல விடயங்களை இவர் தனது படங்களில் வெளிப்படுத்தினார். இவர் தற்காலத் திரைப்படத் துறையில் மிகப் பெரியவரும் மிகுந்த செல்வாக்கு உள்ளவருமான இயக்குனராகக் கருதப்படுகிறார்.
 
62 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், இவற்றுட் பலவற்றைத் தானே எழுதியும் இருக்கிறார். அத்துடன் 170க்கு மேற்பட்ட நாடகங்களையும் இயக்கினார். [[லிவ் உல்மன்]], [[பிபி அண்டர்சன்]], [[மக்ஸ் வொன் சிடோ]] போன்றவர்கள் இவரது அனைத்துலகப் புகழ் பெற்ற நடிகர்களுள் சிலராகும். இவரது படங்களில் பல இவரது சொந்த நாடான சுவீடனின் நிலத்தோற்றப் பின்னணியில் எடுக்கப்பட்டவை. இவருடைய படங்களின் கருக்கள் பெரும்பாலும், ஊக்கக்குறைவு, [[இறப்பு]], [[நோய்]], [[துரோகம்]], [[பைத்தியம்]] போன்றவற்றுடன் தொடர்பானவை.
 
பேர்க்மன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தாலும், 1976 ஆம் ஆண்டில் [[வருமானவரி]] ஏய்ப்பு தொடர்பிலான [[குற்றவியல்]] விசாரணைகளினால் இவரது தொழில் பாதிப்புக்குள்ளானது. அக்காலத்தில், நிலுவையில் இருந்த படத்தயாரிப்பு வேலைகளைக் கைவிட்டதுடன், தனது கலைக் கூடத்தையும் மூடிவிட்டு எட்டு ஆண்டுகள் [[ஜேர்மனி]]யில் மறைந்து வாழ்ந்தார்.
 
[[பகுப்பு:திரைப்பட இயக்குனர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இங்மார்_பேர்ஜ்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது