மம்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆனது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2800 காலகட்டம்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருக பெருக இறந்தப்பிறகு செய்யப்படும் சடங்கானது [[சமூகத் தகுதிநிலை|சமூகத் தகுதிநிலையை]] உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரும் பெரும் கல்லரைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன.
 
நான்காவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2600 காலகட்டம்) பதப்படுத்தும் முறைகளின் மூலம் மம்மிக்களை உருவாக்கி சாதித்தார்கள். இதயம் தவிர்த்த பிற உள் உடலுறுப்பு நீக்கம் முறையின் மூலம் மம்மிக்களை உருவாக்கினார்கள். தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிட்டு சில வகையான எண்ணெய்கள் மற்றும் கனிமங்களை இட்டு நிரப்பிவிடுவார்கள். பின்னர் எண்ணெய்யில் நனைத்த பருத்தி துணியால் உடல் முழுவதும் பல முறை சுற்றுவர். மம்மியின் தலை உருவம் ஒன்றை கவசம் போன்று தலைப்பகுதியில் பொருத்துவர். மம்மியை மரப்பெட்டியில் வைத்து [[பிரமிடு|பிரமிடில்]] அடக்கும் செய்வர்.
 
==கிருத்துவ மம்மிக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மம்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது