உத்தவ கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 149:
* குணமயம், சித்தமயம் சீவனுக்குரியது. ஐம்புலன்கள் வழியாக பொருட்களை நுகர்வதால், மனம் அதில் ஆழமாக ஈடுபடுகிறது. சித்தத்தின் சங்கல்ப - விகல்பத்தால் பொருட்கள் தோன்றுகிறது. எனவே சீவன், பரமாத்மா வடிவானதால், மனம் அலைந்து திரிவதையும், பொருட்களின் மீதான பற்றையும் துறந்து விட வேண்டும்.
* விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் உறக்க நிலை என்ற மூன்றும் புத்தியின் செயல்களே. சீவன் இந்த மூன்று நிலைகளுக்கு சாட்சி சைதன்யமாக மட்டும் உள்ளது.
* சங்கல்ப-விகல்பங்களால் மனம் செயல்களை செய்து, ஆத்மாவை, சாத்வீகம்-ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்களில் சிக்க வைக்கிறது. எனவே நான்காம் நிலையான ”[[துரீயம்துரியம்]]” என்ற [[பிரம்மம்|பிரம்ம நிலையில்]] உறுதியாக நின்று பொருட்பற்று - மனம் என்ற இரண்டையும் நீக்கி விட வேண்டும்.
* [[ஆத்மா]] வைத் தவிர வேறு எதுவும் இல்லை. '''[[விழிப்புநிலை|விழிப்புநிலையில்]]''' ஆன்மா,பிரபஞ்சத்தோடு(உலகோடு) கலந்து நிற்கும், கனவுநிலையில்'''[[கனவு]]''' நிலையில் ஆன்மா தான் அனுபவித்ததை கழுத்துக்கு மேலே ஒளிமயமாகக் காணும், ஆழ்ந்த உறக்க நிலையில் ('''[[சுசுப்தி]]''') அகந்தையை விட்டு, தன் வசமற்று இருக்கும், ஆன்மா மூலப் பிரகிருதியுடன் பொருந்தி இருக்கும் நிலையே '''[[துரியம்]] ''', சீவனும், சிவனும் இரண்டறக் கலந்து சிவம் மட்டும் விளங்கி நிற்பது '''[[துரியாதீதம்]]''' இவ்விதம் ஐந்து நிலைகளிலும் சாட்சியாக இருக்கும் [[ஜீவாத்மா]] ஒன்றே தான்.
* மனதின் விழிப்புநிலை முதலிய ஐந்து அவஸ்தைகளும் ([[பஞ்ச கோசம்]]), சாத்வீகம் முதலிய [[முக்குணங்கள்]] மூலமாக என்னுடைய [[மாயை| மாயையால்]] சீவனிடம் கற்பிக்கப்படுகிறது. என்பதை உணர்ந்து, அனுமானம், சான்றோர்களின் கூற்று, சாத்திரங்கள் மற்றும் கூர்மையான கத்தி போன்ற ஞானத்தாலும் அனைத்து துயரங்களுக்கும் ஆதாரமான அகங்காரத்தை வெட்டித் தள்ளிவிட்டு, இதயத்தில் விளங்கும் பரமாத்மாவை வழிபட வேண்டும்.
* இவ்வுலகம் என் மனதால் தோற்றுவிக்கப்பட்டது; இது நிலையானது போல் காணப்பட்டாலும் இல்லாததற்கு ஒப்பானது. இதற்கு '''[[மித்யா]]''' என்பர். இவ்வுலகம் சுழலும் நெருப்பு வளையம் போல் சஞ்சலமானது. அறிபவன், அறியப்படும் பொருள் ([[திருக்-திருஷ்யம்]]) என்ற போதமில்லாத ஞான வடிவான ஆத்மாதான் பல்வேறு பொருட்களாக தோற்றமளிக்கிறது. இந்த மனித உடல் மூன்று வகையான குணங்களின் செயல், கனவுபோல், மாயையின் லீலை, அறியாமையால் கற்பிக்கப்பட்ட்து.
"https://ta.wikipedia.org/wiki/உத்தவ_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது