இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
== கொடைகள் ==
பயன்மிக்க வாழ்க்கை அமைத்துக் கொண்டவர், முனைவர், இரா. கிருஷ்ணமூர்த்தி. அவரது கொடை பண்பால், பயன்பெற்றவர்கள் ஏராளம்.
 
[[கல்வி நிறுவனங்கள்]], ஏழை மாணவ மாணவியர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் உயர பொருளுதவிகள் செய்துள்ளார். [[கொத்தடிமை]]யாக இருந்து மீட்கப்பட்ட [[இருளர்பழங்குடி]]யினத்தை சேர்ந்த குடும்பங்கள் சிலவற்றை, [[காஞ்சிபுரம்]] அருகே [[கீழ்கதிர்பூர்]] என்ற கிராமத்தில் குடியேற்றியது. அவர்கள் மறு வாழ்வுக்கு நிலமும் ஒதுக்கப்பட்டது. அங்கு, சிறிய அளவிலான படிப்பகம் ஒன்றை அமைக்க, பொருளுதவி செய்துள்ளார்.
 
பின்தங்கிய பகுதி ஏழைகள், கல்வி முன்னேற்றத்துக்கு, [[தினமலர்நாளிதழ்]] நடத்திவருகிறது, ‘ஜெயித்துக்காட்டுவோம்]]’ என்ற நிகழ்ச்சி. இது, 1998 முதல் ஏழை மாணவ, மாணவியரை படிப்பிலும், வாழ்க்கையிலும் ஆண்டுதோறும் ஜெயிக்க வைக்கிறது.
[[இந்திய முன்னாள் ஜனாதிபதி]], டாக்டர் [[ஏ.பி.ஜே.அப்துல் கலாம்]], 2007 மற்றும், 2012 என, இரண்டு முறை, சென்னையில், [[மாநகராட்சிப்பள்ளி]] மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உரையாடி ஊக்கப்படுத்தினார்.
 
[[திருநெல்வேலி]], [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக]]த்தில் [[இதழியல்]] படிப்புக்குத் தனித்துறை உள்ளது. இந்த துறையில் நவீன வகுப்பறை, ஆய்வகம், படிப்பகம் நவீன தொடர்பியல் சாதனங்கள் பொருத்த வசதியான அறைகள், விவாதக்கூட அரங்கங்கள் உருவாக்கப் போதிய கட்டமைப்பு வசதி பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாமல் இருந்தது.
இதை அறிந்த இரா.கிருஷ்ணமூர்த்தி போதிய வசதிகளுடன், தேவையான கட்டடத்தை பெரும் பொருட்செலவில் கட்டியுள்ளார்
இதற்கு, ‘[[இராம சுப்பையர் கிருஷ்ணமூர்த்தி ஊடகக்கூடம்]]’ என, பெயர் சூட்டியுள்ளது பல்கலை நிர்வாகம். அந்தக் கட்டடத்தை, பிப்ரவரி 22, 2007ல், சக்தி தொழில் குழுமங்களின் தலைவர், [[பொள்ளாச்சி நா.மகாலிங்கம்]] திறந்துவைத்தார்.
 
பின், இந்த கட்டடத்துடன் விரிவாக்க, ‘பிளாக்’ ஒன்று கட்டப்பட்டது. அதற்கு, 50 சதவீதம் நிதியை முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மீத நிதியை அரசு ஒதுக்கியது. அந்தக் கட்டடத்தை, தினமலர் இணை ஆசிரியர் [[கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு]], நவம்பர் 22, 2017ல் திறந்து வைத்தார். கட்டடத்துக்கு, ‘[[ஆர்.கே. மீடியா பிளாக்]]’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது