அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21,296 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''காரைக்கால் அம்மையார்''' எழுதிய அற்புதத் திருவந்தாதி
 
==அற்புதத் திருவந்தாதி==
இப்பக்கத்தில் முதல் 50 பாடல்கள் உள்ளன. மீதிப் பாடல்களைப் பார்க்க [[இரண்டாம் பக்கத்துக்குச் செல்லவும்]]
 
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
 
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
 
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
 
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1
 
 
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
 
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
 
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
 
அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2
 
 
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
 
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
 
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
 
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3
 
 
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
 
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
 
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
 
எம்மைஆட் கொண்ட இறை..................................4
 
 
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
 
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
 
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
 
வந்தால் அது மாற்றுவான்......................................5
 
 
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
 
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
 
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
 
என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6
 
 
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
 
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
 
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
 
அம்மானுக் காளாயினேன்.......................................7
 
 
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
 
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
 
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
 
அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8
 
 
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
 
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
 
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
 
எப்பொருளு மாவ தெனக்கு......................................9
 
 
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
 
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
 
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
 
உண்டே எனக்கரிய தொன்று...................................10
 
 
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
 
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
 
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
 
அங்கையாற் காளாம் அது......................................11
 
 
 
 
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
 
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
 
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
 
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12
 
 
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
 
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
 
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
 
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13
 
 
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
 
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
 
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
 
நீணாகத் தானை நினைந்து......................................14
 
 
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
 
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
 
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
 
கென்செய்வான் கொல்லோ இனி..................................15
 
 
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
 
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
 
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
 
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16
 
 
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
 
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
 
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
 
ஆதியாய் நின்ற அரன்.........................................17
 
 
அரனென்கோ நான்முக னென்கோ அரிய
 
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
 
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
 
யானவனை எம்மானை இன்று....................................18
 
 
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
 
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
 
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
 
ஆவானைக் காணும் அறிவு.......................................19
 
 
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
 
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
 
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
 
அப்பொருளும் தானே அவன்......................................20
 
 
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
 
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
 
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
 
மயனாகி நின்றானும் வந்து.......................................21
 
 
வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
 
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
 
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
 
பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22
 
 
பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
 
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
 
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
 
எந்தையா வுள்ள மிது............................................23
 
 
இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
 
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
 
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
 
இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24
 
 
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
 
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
 
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
 
நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25
 
 
ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
 
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
 
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
 
அக்கயலே தோன்றும் அரவு......................................26
 
 
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
 
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
 
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
 
பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27
 
 
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
 
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
 
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
 
என்முடிவ தாக இவர்...........................................28
 
 
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
 
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
 
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
 
பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29
 
 
பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
 
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
 
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
 
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30
 
 
மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
 
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
 
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
 
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
 
 
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
 
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
 
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
 
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்..................................32
 
 
நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக
 
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது
 
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
 
அக்கோலத் தவ்வுருவே யாம்.....................................33
 
 
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
 
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
 
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி
 
அருகணையா தாரை அடும்......................................34
 
 
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து
 
இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
 
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
 
மணிமிடற்றின் உள்ள மறு.......................................35
 
 
மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்
 
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்
 
தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி
 
வளருமோ பிள்ளை மதி.........................................36
 
 
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
 
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
 
என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்
 
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.................................37
 
 
ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
 
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
 
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
 
கூரேறு கானேனக் கொம்பு......................................38
 
 
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
 
அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்
 
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
 
மணிவரையே போலும் மறித்து...................................39
 
 
மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
 
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
 
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
 
உள்ளாதார் கூட்டம் ஒருவு......................................................40
 
 
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
 
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
 
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
 
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41
 
 
நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
 
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
 
வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ
 
இளங்குழவித் திங்க ளிது.......................................42
 
 
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
 
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
 
வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே
 
தானே யறிவான் தனக்கு........................................43
 
 
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
 
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
 
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
 
பேராளன் வானோர் பிரான்......................................44
 
 
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
 
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
 
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்
 
இங்குற்றான் காண்பார்க் கெளிது................................45
 
 
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
 
அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று
 
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
 
சிந்தையராய் வாழும் திறம்.....................................46
 
 
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
 
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
 
இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்
 
திருவடிக்கண் சேரும் திரு.....................................47
 
 
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
 
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
 
இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது
 
அதுமதியொன் றில்லா அரா.....................................48
 
 
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
 
விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்
 
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
 
தன்னோடே யொப்பான் சடை...................................49
 
 
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
 
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்
 
வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்
 
குலப்பாவை நீலக் குழல்.......................................50
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/30478" இருந்து மீள்விக்கப்பட்டது