ஜிமி ஹென்றிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> |Name = ஜிமி ஹென்றிக்ஸ் |Img = Ji...
 
No edit summary
வரிசை 23:
'''ஜிமி ஹென்றிக்ஸ்''' எனப்படும் '''ஜேம்ஸ் மார்ஷல் ஹென்றிக்ஸ்''' (நவம்பர் 27, 1942 – செப்டெம்பர் 18, 1970) ஒரு அமெரிக்க [[கிட்டார்]] கலைஞரும், [[பாடகர்|பாடகரும்]], [[பாடலாசிரியர்|பாடலாசிரியரும்]] ஆவார். இவரது கிட்டார் வாசிப்பு [[ராக் இசை]]யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துயது. ஐரோப்பாவில் இவ்ருக்குக் கிடைத்த தொடக்க வெற்றிகளுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டில் [[மான்டரி பாப் விழா]]வில் இடம்பெற்ற இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிலும் பெரும் புகழ் பெற்றார். 1969 இன் வூட்ஸ்டாக் விழாவிலும் (Woodstock Festival) இவருக்கு முக்கிய இடம் கிடைத்தது.
 
ஹென்றிக்ஸ், [[உருத்திரிபுப் பெருக்கி]]யுடனான (overdriven amplifiers) [[கிட்டார் பின்னூட்டம்|கிட்டார் பின்னூட்ட]] (guitar feedback) நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவினார். இவர் புளூஸ் இசைக் கலைஞர்களான [[பி. பி. கிங்]], [[மடி வாட்டர்ஸ்]], [[ஹவ்லின் வூல்ஃப்]], [[ஆல்பர்ட் கிங்]], [[எல்மோர் ஜேம்ஸ்]] ஆகியோரிதும், [[ரிதம் அண்ட் புளூஸ்]] இசையினதும், [[சோல் இசை|சோல்]] கிட்டார் கலைஞர்களான [[கர்ட்டிஸ் மேஃபீல்ட்]], [[ஸ்டீவ் குரொப்பர்]] ஆகியோரினதும், ஓரளவு நவீன [[ஜாஸ் இசை]]யினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். கார்லோஸ் சன்டானா, ஹென்றிக்சின் இசையில் [[தாயக அமைரிக்கர்|தாயக அமெரிக்கப்]] பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கக்கூடும் எனக் கருதினார்.
 
[[பகுப்பு:அமெரிக்க இசைக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிமி_ஹென்றிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது