பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாடு"; Quick-adding category "தமிழ்நாட்டினர்" (using HotCat)
சி தமிழ் எழுத்தாளர் இரா.முருகன்
வரிசை 2:
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டினர்]]
இரா.முருகன்
 
தமிழ் எழுத்தாளர்
 
__TOC__ பிறப்பு__NOTOC__
1953-ல் சிவகங்கையில் பிறந்தவர் இரா.முருகன். தந்தையார் நா.சீ.இராமசாமி. தாயார் மீனாட்சி.
 
__TOC__ தொழில் __NOTOC__
 
கணினித்துறை பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரி
 
__TOC__ படைப்புலகம் __NOTOC__
 
 
1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது.
 
கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளன. சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.
 
தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் நாவல் ஆங்கிலத்தில் 'கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. தற்போது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக 'விஸ்வரூபம்' நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.
 
அறிவியல் கட்டுரை மற்றும் பத்திரிகைப் பத்திகள் இவருடைய கட்டுரையாக்கங்கள். இணையத் தளங்கள் இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும்.
 
மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் இவர்.
 
__TOC__ விருதுகள் __NOTOC__
 
இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு (சிறந்த சிறுகதை), கதா விருது (சிறுகதை), பாரதியார் பல்கலைக் கழக விருது (நாவல்) போன்ற பல பரிசுகள் இவருடைய படைப்புகளுக்காகப் பெற்றிருக்கிறார்.
 
__TOC__ நூல்கள் __NOTOC__
 
இதுவரை இரா.முருகனின் 18 நூல்கள் வெளியாகி உள்ளன.
 
அவை
 
1) தேர் - சிறுகதைத் தொகுதி (அசோகமித்திரன் முன்னுரையோடு)
 
2) ஆதம்பூர்க் காரர்கள் (சிறுகதைத் தொகுதி)
 
3) சிலிக்கன் வாசல் (சிறுகதைத் தொகுதி - லில்லி தேவசிகாமணி விருது பெற்றது)
 
4) கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - இந்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி பரிசு பெற்றது)
 
5) ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் (கவிதைத் தொகுதி - வாசுதேவன் நினைவுப் பரிசு)
 
6) கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - ராஜாராமனுடன் சேர்ந்து எழுதியது - வரதாச்சாரி விருது)
 
7) தகவல்காரர் (குறுநாவல் தொகுதி)
 
8) முதல் ஆட்டம் (சிறுகதைத் தொகுதி)
 
9) பகல் பத்து ராப்பத்து (குறுநாவல் தொகுதி)
 
10) ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் (சிறுகதைத் தொகுதி)
 
11) மந்திரவாதியும் தபால் அட்டைகளும் (சிறுகதைத் தொகுதி)
 
12) மூன்று விரல் (நாவல் - கணினித் துறை பற்றிய முதல் தமிழ் நாவல்)
இரண்டு வெளியீடுகள்
 
14) சைக்கிள் முனி (சிறுகதைத் தொகுதி)
 
15) ராயர் காப்பி கிளப் (கட்டுரைத் தொகுதி)
 
16) அரசூர் வம்சம் (நாவல்)
 
17) இரா.முருகன் சிறுகதைகள் (செம்பதிப்பு - 108 சிறுகதைகள் அடங்கியது)
 
18) இரா.முருகன் சிறுகதைகள் (ஒலிப் புத்தகம் - ஆடீயோ புக்)
 
19) Ghosts of Arasur (novel - translation of 'Arasur vamsam')
 
20) நெம்பர் 40, ரெட்டைத் தெரு (bio-fiction)
"https://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழக_எழுத்தாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது