விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி (→‎கல்வியியல் நோக்கில் கேள்விகள்: எழுத்து/இலக்கணத் திருத்தம்)
அடையாளம்: 2017 source edit
 
:::கட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதென, கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. '''படத்தைப் பார்த்து பங்களி''' என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். [[s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf]] என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)
 
:::எனக்கும் இலக்குகள் சற்று மிகுதியாகவும் பரவலாகவும் உள்ளதுபோலப் படுகிறது. குறிப்பாக கல்லூரிப்பாடத்தின் ஒருபகுதியாக இல்லாமல் கூடுதல் முனைப்பின்வழி பங்கேற்பதால், நாம் குறிப்பிட்ட இலக்குகளில் மாணவர் விருப்பப்படி இரண்டையோ மூன்றையோ தேர்ந்தெடுத்து அடைந்தால் போதுமானது. தேவைப்பட்டால், கூடுதல் இலக்குகளை எட்டுபவர்களுக்குச் சிறப்பாக எதுவும் சான்றிதழோ பரிசோ அறிவிக்கலாமென நினைக்கிறேன். இந்த முனைவைத் தொடங்கியமைக்கு நன்றி, நீச்சல் காரன். இதில் பங்காற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் என்னாலியலும் பணிகளை மேற்கொள்ளப் பார்க்கிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:19, 20 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3050096" இருந்து மீள்விக்கப்பட்டது