திரைப்பட நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''திரைப்பட நட்சத்திரம்''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:05, 20 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

திரைப்பட நட்சத்திரம் (Movie star) என்பது ஒரு நடிகர் அல்லது நடிகை என்பவர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அல்லது முன்னணி பாத்திரங்களுக்கு பிரபலமானது மூலம் 'திரைப்பட நட்சத்திரம்' என்று அழைக்கப்படுகின்றனர்.[1][2] இவர்களின் பெயர்கள் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்த அல்லது விளம்பரப்படுத்த பெரும்பாலும் உபயோகிக்கப் படுகின்றது. உதாரணமாக திரைப்பட சுவரொட்டிகள் மற்றும் திரைப்பட முன்னோட்டக்காட்சிககளில்.[3]

ஆரம்ப ஆண்டுகள்

 
முதல் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான மெரி பிக்ஃபோர்ட்.

ஊமைத் திரைப்படங்கள் காலத்தில் அவற்றில் தோன்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்கள் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஏனெனில் இது அதிக சம்பளத்திற்கான கோரிக்கைகளை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.[4] இருப்பினும், பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இந்த நோக்கம் கைவிடப்பட்டது.

1909 ஆம் ஆண்டில் நடிகைகளான 'புளோரன்ஸ் லாரன்ஸ்' மற்றும் மெரி பிக்ஃபோர்ட் ஆகியோர்கள் பரவலாக அறியப்பட்டவர்கள் ஆனால் பொதுமக்களின் மத்தியில் அவர்களின் பெயர் அறியப்படவில்லை. ஏனெனில் நடிகை 'புளோரன்ஸ் லாரன்ஸ்' என்பவர் 'பையோகிராஃப் ஸ்டுடியோஸ்' தயாரித்த திரைப்படங்களில் பணிபுரிந்த காரணத்தால் 'சுயசரிதை பெண்' (பையோகிராஃப் கேர்ள்) என்று அறியப்பட்டார். 1910 ஆம் ஆண்டில் 'இன்டிபென்டன்ட் மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு மாறிய பிறகு தனது சொந்த பெயரான 'புளோரன்ஸ் லாரன்ஸ்' என்றே தோன்றத் தொடங்கினார்.

இந்தியா

இந்தியத் திரைப்படத்துறையை பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி போன்ற பல திரைப்படத்துறையில் பணி புரியும் நட்சத்திரங்கள் அவர்களின் மாநிலங்கள் வாரியாக பிரபலமாக இருப்பார்கள். அதையும் தாண்டி இரசினிகாந்து, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற சிலர் இந்தியா நாட்டை தாண்டியும் ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் பிரபலமாக உள்ளார்கள். நடிகர் இரசினிகாந்து நடித்த முத்து போன்ற திரைப்படங்கள் ஜப்பான் நாட்டில் வெளியாகி 1.6 மில்லியன் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்களை

  1. Albert, S. "Movie Stars and the Distribution of Financially Successful Films in the Motion Picture Industry". Journal of Cultural Economics 22 (4): 249–270. doi:10.1023/A:1007511817441. 
  2. Albert, S. "Movie Stars and the Distribution of Financially Successful Films in the Motion Picture Industry". Journal of Cultural Economics 23 (4): 325–329. doi:10.1023/A:1007584017128. 
  3. Shugan, S (2005). Moul, C. ed. A Concise Handbook of Movie Industry Economics. Cambridge: Cambridge University Press. 
  4. "100 years of movie stars: 1910-1929", The Independent, January 25, 2010.
  5. "Happy birthday, Rajinikanth!". Mid Day. Archived from the original on 14 October 2013. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்பட_நட்சத்திரம்&oldid=3050373" இலிருந்து மீள்விக்கப்பட்டது