வீட்டு ஈ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''வீட்டு ஈ''' (''Housefly'') என்பது ஒரு சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த ஒரு [[இருசிறகிப் பூச்சிகள்|இருசிறகிப் பூச்சி]] ஆகும். இது செனோசோயிக் சகாப்தத்தில், ஒருவேளை மத்திய கிழக்கில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் இது [[மனிதர்]]களின் [[கூட்டு வாழ்க்கை]]யோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீடுகளில் பொதுவாக காணப்படும் பொதுவான ஈ இனம் இதுவேயாகும். வளர்ந்த ஈக்கள் சாம்பல் முதல் கருப்பு நிறம் வரையானதாகவும், மார்பில் நான்கு அடர்வண்ண, நீளக் கோடுகளுடன், சற்று மயிருள்ள உடலுடன், ஒரு ஜோடி இறக்கைகள் கொண்டவையாக உள்ளன. இவை சிவப்பு நிறக் கூட்டுக் கண்கள் கொண்டவை.
 
பெண் ஈ வழக்கமாக ஒரு முறை மட்டுமே இணைசேரும் என்றாலும் [[விந்து]]க்களை பின்னரும் பயன்படுத்த சேமித்துக்கொள்கிறன. இவை உணவு கழிவுகள், அழுகிய பிணம், [[மலம்]] போன்ற சிதைந்துபோகும் கரிமப் பொருட்களில் சுமார் 100 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து கால்கள் இல்லாத வெள்ளை லார்வா புழுக்கள் வெளிவருகின்றன. இரண்டு முதல் ஐந்து நாட்கள் வளர்ச்சிக்குப் பின்னர், இவை [[உருமாற்றம்]] அடைந்து , சுமார் {{Convert|8|mm|in|frac=8|abbr=off}} நீளமான சிவப்பு-பழுப்பு நிற [[கூட்டுப்புழு]]க்களாக ஆகின்றன. வயதுவந்த ஈக்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன, ஆனால் இவை குளிர்காலத்தில் ஓய்வுறு (ஓய்வு+உறக்கம்) கொள்கின்றன. வளர்ந்த ஈக்கள் பலவிதமான திரவ அல்லது கூழ்ம பொருட்களையோ, இவற்றின் [[உமிழ்நீர்|உமிழ்நீரால்]] கரைக்கபட்ட திடப்பொருட்களையோ உணவாக கொள்கின்றன. இவை தங்கள் உடலிலும், மலத்திலாலும் [[நோய்க்காரணி|நோய்க்கிருமிகளை]] பரப்பும் வாய்ப்பு உள்ளது. இவை உணவை மாசுபடுத்தக்கூடியனவாகவும், [[உணவுவழி நோய்த்தொற்று]]களை கொண்டுவருவனவாகவும் அதே நேரத்தில், இவை உடல் ரீதியாக எரிச்சலூட்டக்கூடியனவாக உள்ளன. இந்த காரணங்களுக்காக, இவை [[தீங்குயிர்]]களாக கருதப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வீட்டு_ஈ" இலிருந்து மீள்விக்கப்பட்டது