ஒக்டோபர் எழுச்சி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added the photo with reference
வரிசை 1:
'''சுண்ணாக எழுச்சி''' அல்லது '''ஒக்டோபர் எழுச்சி''' என்பது [[தீண்டாமை|தீண்டாமைக்கும்]], சாதியத்துக்கும் எதிராக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்பாக [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)|இலங்கைப் பொதுவுடமைக் கட்சி (சீன சார்பு)]] முன்னெடுத்தனர். சட்ட அனுமதி [[காவல்துறை|காவல்துறையினரிடம்]] கேட்கப்பட்ட போதும், அது தரப்படவில்லை. எனினும் ஊர்வலம் ஒக்டோபர் 21, 1966 ம் திகதி, [[சுண்ணாகம்|சுண்ணாகத்தில்]] இருந்து புறப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி தொடங்கியது. அந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் கலந்து கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர், பலரைக் கைது செய்யதனர். இதைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நிலை உருவானது. இதைத் தவிர்க்க முழக்கங்கள் இன்றி ஊர்வலத்தைத் தொடர காவல்துறை அனுமதித்தது. ஊர்வலம் தொடர மேலும் பல மக்கள் சேர்ந்து கொண்டனர், மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையிலும் கூட்டம் முற்றவெளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வும், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுமே ஒக்டோபர் எழுச்சி என்று ஈழத்தில் அறியப்படுகிறது.<ref>[[சி. கா. செந்திவேல்]], [[ந. இரவீந்திரன்]]. 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.</ref>
 
== பின்புலம் ==
 
யாழ்ப்பாணத்தில் 1960 களிலும் [[தீண்டாமை]] பொது இடங்களிலும் தீவரமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்குள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. இது மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்திலேயே வெளிப்பட்டது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் 1960 களில் சர்வதேசப் புரட்சிச் சூழ்நிலை, இந்தத் தளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தியது. அதன் ஒரு திருப்பு முனையாக ஒக்டோபர் எழுச்சி பார்க்கப்படுகிறது.<ref>{{cite news|title=Conference held to explore and redress caste oppression|url=http://www.ft.lk/article/575291/Jaffna-Conference-held-to-explore-and-redress-caste-oppression|newspaper=DailyFT By Thulasi Muttulingam|date=22 October 2016|df=}}</ref>
 
== வரலாற்றை மாற்றிய ஊர்வலம் ==
[[படிமம்:21 October 1966.png|left|thumb|பொலீஸ் தாக்குதலுக்கு முன் ஊர்வலத்தில் வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் சு.வே. சீனிவாசகம், எம்.முத்தையா . [[கே. டானியல்]], டி.டி.பெரேரா, [[கே. ஏ. சுப்பிரமணியம்]] ஆகியோர் தலைமை தாங்கிச் செல்கின்றனர்.]]
ஊர்வலத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வந்திருந்த கட்சித் தலைவரான [[நா. சண்முகதாசன்]] சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி இறுதியாக ஒருமுறை கேட்டுப் பார்த்தார். அப்பொழுதும் பொலிசார் மறுத்துவிட்டனர்.
அன்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் [[சுண்ணாகம்]] சந்தை வளாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சாதியத்தை எதிர்த்த புரட்சிகர முழக்கங்களுடன் பேரணியை ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த சுண்ணாகம் பொலிஸ் நிலையம் முன்பாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸ் படையினர் பேரணியை வழிமறித்துத் தாக்கினர்.
தலைமை தாங்கி முன்னணியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித் தனமான குண்டாந்தடித் தாக்குதல் நடாத்தப்பட்டது.
மேற்படி தாக்குதலில் தலைமை தாங்கி முன்னணியில் சென்ற வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் இரத்தம் வழிந்தோட பொலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
அன்றைய பேரணியில் முன்னே சென்று கொண்டிருந்த டாக்டர் சு.வே.சீனிவாசகம், [[கே. டானியல்]], எஸ்.ரி.என்.நாகரட்ணம், டி.டி.பேரேரா, எம்.முத்தையா மற்றும் அன்றைய வாலிபர் இயக்கத் தலைவர்கள் கடுமையான அடிகாயங்களுக்கு உள்ளாகினர். <ref>{{cite book|title=வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்|url=http://noolaham.net/project/148/14737/14737.html }} [[சி. கா. செந்திவேல்]] 2003</ref><ref>{{cite book|title=சாதி தேசம் பண்பாடு|url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 }} [[ந. இரவீந்திரன்]] 2014</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[சங்கானைக்கு என் வணக்கம்]]
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்டோபர்_எழுச்சி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது