விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

(→‎முதல் நாள் இற்றை: புதிய பகுதி)
 
மேலே குறிப்பிட்டுள்ள அனைவரின் கருத்துக்களை உள்வாங்கி பயிற்சியை அளிப்போம். கல்லூரித் தரப்பில் 66 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உள்ளகப்பயிற்சி அல்லாமல் கலந்து கொள்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். 60% கைப்பேசி, 30% மடிக்கணினி என்றே மாணவர்கள் தரப்பில் பங்களிக்கவுள்ளனர். எனவே பயிற்சி பெரும்பாலும் கைப்பேசி சார்ந்து அமையுமாறு அமைப்போம். மாற்றுத் தேதிகள் ஏதுமில்லாததால் அக்டோபர் 23 அன்றே தொடங்கிவிடலாம் மேலும் பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி இதர அமர்வுகளின் தேதியை இறுதி செய்வோம். மாணவர்கள் விரும்பினால் சில அமர்வுகளை மீண்டும் நடத்தும் வகையில் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளலாம். அனைத்துப் பங்கேற்பாளர்களின் பயனர் பெயர்களையும் முன்பதிவு செய்யச் சொல்லுவோம். அதனால் ஏதேனும் பக்கம் தவறானால் இந்தப் பயனர்களின் பக்கங்களை நீக்காமல் பயனர்வெளிக்கு மாற்றிவிடக் கேட்டுக் கொள்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:14, 21 அக்டோபர் 2020 (UTC)
 
== முதல் நாள் இற்றை ==
 
சி.ஐ.எஸ். நிகழ்ச்சி நல்கைக்கு ஒப்பம் அளித்துவிட்டனர். திட்டமிட்டபடி இன்று விக்கித் திட்டங்கள் குறித்த மேலோட்டமான அறிமுகம், உள்ளகப்பயிற்சிக்கான அறிமுகம், பயனர் பெயர் உருவக்கம் நடந்தன. விக்கிப்பீடியா சார்பாக பாஹிம், மகாலிங்கம், ஸ்ரீதர், தகவலுழவன், நீச்சல்காரன் முதலியோர் கலந்து கொண்டனர். மாணவர்களைத் திட்டப்பக்கத்தில் முன்பதிவு செய்யச் சொல்லியுள்ளோம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:19, 23 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3051519" இருந்து மீள்விக்கப்பட்டது