பெரோவிசுக்கைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

20:23, 23 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பெரோவிசுக்கைட்டு (Perovskite) என்பது கால்சியமும் தைட்டேனியமும் கலந்த கால்சியம் தைட்டனேட்டுக் கனிமம் (CaTiO3). பெரோவிசுக்கைட்டு என்னும் இப்பெயர் கால்சியம் தைட்டனேட்டு CaTiO3 (XIIA2+VIB4+X2−3) படிக வகையைக் சேர்ந்தவற்றுக்கு வழங்கப்பெறுகின்றது, இது போன்ற பிற வகைகளையும் பெரோவிசுக்கைட்டு கட்டமைப்பு (|perovskite structure) என்றழைக்கப்படுகின்றது.[5] பல்வேறு வகையான நேர்மின்முனையப் (எதிர்மின்னிகளை ஈர்க்கும்) பொருள்களை இந்தக் கட்டமைப்பில் உள்புதைத்து பயனுடைய பொறியியல் பயன்பாட்டுப் பொருள்களை உருவாக்க முடியும் .[6]

பெரோவிசுக்கைட்டு
Perovskite
ஓர் அணியமைப்பின் மீது பெரொவிசுக்கைட்டுப் படிகங்கள்
பொதுவானாவை
வகைOxide minerals
வேதி வாய்பாடுCaTiO3
இனங்காணல்
மோலார் நிறை135.96 கி/மோல்
நிறம்கறுப்பு, செம்பழுப்பு, வெளிர் மஞ்சள், மஞ்சள் சார் செம்மஞ்சள்
படிக இயல்புPseudo cubic – crystals show a cubic outline
படிக அமைப்புOrthorhombic
இரட்டைப் படிகமுறல்சிக்கலான ஊடுருவு இரட்டு
பிளப்பு[100] நன்கு, [010] நன்கு, [001] நன்கு
முறிவுConchoidal
மோவின் அளவுகோல் வலிமை5–5.5
மிளிர்வுஆடமனைட்டு முதல் மாழை பளபளப்பு; மங்கலாகவும் இருகக்லாம்.
கீற்றுவண்ணம்சாம்பல்னிறம் சார் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளியூடுருவு வகை முதல் ஒளிபுகாத் தன்மை வரைt
ஒப்படர்த்தி3.98–4.26
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+) Biaxial (+)
ஒளிவிலகல் எண்nα = 2.3, nβ = 2.34, nγ = 2.38
பிற சிறப்பியல்புகள்கதிர்வீச்சில்லா, காந்தத்தன்மையில்லா
மேற்கோள்கள்[1][2][3][4]

வரலாறு

இக் கனிமத்தை ஊரல் மலைப்பகுதியில் உருசியர் குசுத்தாவ் உரோசு (Gustav Rose) 1839 இல் கண்டுபிடித்தார். இவர் உருசிய கனிமவியலாளரான இலேவ் பெரோவிசுக்கி (Lev Perovski) (1792–1856). என்பாரின் பெயரைச் சூட்டினார்[2] பெரோவிசுக்கைட்டின் குறிப்பிடத்தக்க படிக அமைப்பை முதன்முதலாக 1926 இல் விட்டர் கோற்றுசுமித்து (Victor Goldschmidt) உறழ்ச்சிக்கூறுகள் (tolerance factors) பற்றிய தன் படைப்பில் குறிப்பிட்டார்.[7] எலன் திக்கு மெகாவ் (Helen Dick Megaw) அவர்களின் பேரியம் தைட்டனேட்டைப் பற்றிய ஊடுகதிர் சிதறல் தரவுகளின் அடிப்படையில் 1945 இல் பெரோவிசுக்கைட்டின் படிக அமைப்பு கண்டுபிடித்து வெளியிடப்பட்டது.[8]

கிடைப்பு

சிறப்புப் பண்புகள்

பெரோவிசுக்கைட்டின் நிலைப்புத்தன்மையானது தைட்டனேட்டின் வேதிவினைகளைப் பொருத்து அமைகின்றது.எரிமலைக் குழம்புப் பாறைகளில் தைட்டனேட்டும்(spene) பெரோவிசுக்கைட்டும் சேர்ந்து கிடைப்பதில்லை, ஒரேயொரு விலக்கு காமரூனில் கிடைக்கும் எட்டிண்டைட்டு (etindite).[9]

பருவியக்கப் பண்புகள்

பெரோவிசுக்கைட்டு பெரும்பாலும் கனசதுர (கட்டக) படிக அமைப்பைக் கொண்டது. பொதுவான வாய்பாடு ABO
3
. இவ்வமைப்பில் மூலைகளில் உள்ள A இடத்து இயனி (ion) பொதுவாக புவியில் அரிதில்கிடைக்கும் தனிமக் காரங்களாக இருக்கும், கட்டகத்தின் நடுவே இருக்கும் B-இட இயனிகள் 3d, 4d, 5d வகை இடைநிலை மாழைகளாக ( transition metal elements) இருக்கும். கோற்றுசுமிட்டு உறழ்ச்சி அல்லது இசைவுக் கூறு   ஆனது 0.75–1.0 ஆகியவற்ருக்குள் இருந்தால். நிறைய எண்ணிக்கையான தனிம மாழை அணுக்கள் பெரோவிசுக்கைட்டு அமைப்பில் நிலைப்புத்தன்மை கொண்டவையாக இருக்கும். Peña, M. A.; Fierro, J. L. (2001). "Chemical structures and performance of perovskite oxides". Chemical Reviews 101 (7): 1981–2017. doi:10.1021/cr980129f. பப்மெட்:11710238. http://www.theeestory.com/files/Chemical_Structure_of_Perovskite_Oxides_Pen_a.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]</ref>

 

மேலுள்ளதில் RA, RB and RO ஆகியவை முறையே A, B யின் இயனி ஆரங்களும் ஆக்குசிசனின் ஆரமும் ஆகும்.

பெரோவிசுக்கைட்டுகள் மாழையைவிட (உலோகத்தைவிட) குறைந்த அல்லது அதே அளவு பளபளப்புள்ளவை. நிறமல்லா கீறுபொடி தருபவை, கனசதுரம் போன்ற ஆனால் சீரொழுங்கில்லாத பிளவுகள் உடைய அமைப்புடையவை. எளிதில் உடையும் தன்மையுடையவை. காணப்படும் நிறங்கள்: கறுப்பு, பழுப்பு, சாம்பல், செம்மஞ்சள் முதல் மஞள் வரை, பெரோவிசுக்கைட்டுகள் கனசதுர அமைப்பு கொண்டவை போன்ற தோற்றம் தருபவை, ஆனால் அவை போலி கனசதுர அமைப்புடையவை. கால்சியம் தைட்டனேட்டு போன்ற ஆர்த்தோராம்பிக்கு (orthorhombic) படிகவகையில் படிகமுறும். பெரோவிசுக்கைட்டுப் படிகங்கள் கலீனா (galena) என்பதோடு குழப்பம் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் கலீனா குடுதலான மாழைபோன்ற பளபளப்பும் அதிக அடர்த்தியும் திருத்தமான பிளவுகளும் உண்மையான கனசதுர ஒற்றொருமை (symmetry) அமைப்பும் கொண்டவை. [10]


அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Prehnit (Prehnite). Mineralienatlas.de
  2. 2.0 2.1 Perovskite. Webmineral
  3. Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C. (Eds.) Perovskite. Handbook of Mineralogy. Mineralogical Society of America, Chantilly, VA.
  4. Inoue, Naoki and Zou, Yanhui (2006) Physical properties of perovskite-type lithium ionic conductor. Ch. 8 in Takashi Sakuma and Haruyuki Takahashi (Eds.) Physics of Solid State Ionics. pp. 247–269 ISBN 978-81-308-0070-7.
  5. Wenk, Hans-Rudolf; Bulakh, Andrei (2004). Minerals: Their Constitution and Origin. New York, NY: Cambridge University Press. பக். 413. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52958-7. https://books.google.com/?id=mjIji8x-N1MC&pg=PA413. 
  6. Szuromi, Phillip; Grocholski, Brent (2017). "Natural and engineered perovskites". Science 358 (6364): 732–733. doi:10.1126/science.358.6364.732. பப்மெட்:29123058. Bibcode: 2017Sci...358..732S. 
  7. Golschmidt, V. M. (1926). "Die Gesetze der Krystallochemie". Die Naturwissenschaften 14 (21): 477–485. doi:10.1007/BF01507527. Bibcode: 1926NW.....14..477G. 
  8. Megaw, Helen (1945). "Crystal Structure of Barium Titanate". Nature 155 (3938): 484–485. doi:10.1038/155484b0. Bibcode: 1945Natur.155..484.. 
  9. Veksler, I. V.; Teptelev, M. P. (1990). "Conditions for crystallization and concentration of perovskite-type minerals in alkaline magmas". Lithos 26 (1): 177–189. doi:10.1016/0024-4937(90)90047-5. Bibcode: 1990Litho..26..177V. 
  10. Luxová, Jana; Šulcová, Petra; Trojan, M. (2008). "Study of Perovskite". Journal of Thermal Analysis and Calorimetry 93 (3): 823–827. doi:10.1007/s10973-008-9329-z. http://www.akademiai.com/content/3640137983447pt3/fulltext.pdf. 

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Titanium minerals

வார்ப்புரு:Calcium compounds

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோவிசுக்கைட்டு&oldid=3051791" இலிருந்து மீள்விக்கப்பட்டது