"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,051 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமை ஆய்வாளர்தம் துணிவாகும்
 
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலையென்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் [[துறைமுகம்|துறைமுகமாகவும]] வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றுமழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் நாளுங்கானமுடிகின்றது
 
அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
 
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்றிரவினை அங்கேயே கழித்த்தாகவும் வரலாறுண்டு.
 
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக்கோயில் சோழமன்னர்கள்ளால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.
 
போத்துக்கீயரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஙஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது.
 
அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத்திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.
 
காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது
 
#சைவக் கொள்ககட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல்.
#மேற்கூறிய கொள்கை கோட்பாடு வரையறைகட்கு மாறில்லாத வகையில் செயற்படுதல். ஏனைய இறை வணக்கத் தலங்களை உருவாக்குதலும் துணைபுரிதலும்
#மக்கள் தங்குமடங்கள், கல்விக் கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற அன்றாட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல்
 
 
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/30539" இருந்து மீள்விக்கப்பட்டது