பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
|}
==கூட்டணி==
[[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தேசிய சனநாயகக் கூட்டணி]]யிலுள்ள ஐக்கிய சனதாதளத்தின் [[நிதிஷ் குமார்|நிதீசு குமார்]] பீகாரின் முதல்வராக உள்ளார். சென்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில் [[ஐக்கிய ஜனதா தளம்|ஐக்கிய சனதா தளம்]] பாசக உள்ள தேசிய சனநாயகக் கூட்டணியை எதிர்த்து மாபெரும் கூட்டணி எனப்படும் மகாகாத்பந்தன் கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா என்ற இரு சிறிய கட்சிகள் தேசிய சனநாயகக் கூட்டணியில் பாசகவுடன் இருந்தன. 2017ஆம் ஆண்டு ஐக்கிய சனதாதளம் கூட்டணியை முறித்ததால் மகாகாத்பந்தன் கூட்டணி ஆட்சியை இழந்தது, பாசக ஆதரவு தெரிவித்தது அதனால் நிதிசு குமாரின் ஆட்சி தப்பி தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து விலகின.
 
2020 ஆகத்தில் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா மீண்டும் தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்தது. பின்பு அக்டோபர் 2020 விக்காசீல் இன்சான் இக்கூட்டணியில் இணைந்தது.
 
2015 ஆம் ஆண்டு தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்த லோக் சனசக்தி கட்சி ஐக்கிய சனதாதளத்தை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தமையால் இக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியது. இதனால் பாசகவின் தேசிய தலைவர்கள் லோக் சனசக்தியின் தலைவர் சிராக் பாசுவானை டெல்லிக்கு அழைத்து பேசியதின் விளைவால் லோக் சனசக்தி தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி சனதாதளம் போட்டியிடும் அனைத்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்றும் பாசகவை எதிர்த்து போட்டியிடுவதில்லை என்றும் முடிவாகியது. இதைத்தொடர்ந்து பல பாசக தலைவர்கள் லோக் சனசக்தியில் இணைந்தார்கள். குறிப்பாக மாநில துணை தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இருவர் ஐக்கிய சனதாதளத்தை எதிர்க்க இணைந்தார்கள். பாசக அதிகாரபூர்வமாக லோக் சனசக்தியுடனான உறவை அக்டோபர் 2020 முறித்தது.
 
[[பகுப்பு:பீகார் சட்டமன்றத் தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீகார்_சட்டமன்றத்_தேர்தல்,_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது