ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "ஜெ. ஜெயலலிதா": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சி re-categorisation per CFD using AWB
வரிசை 55:
| death_cause = [[இதய நிறுத்தம்]]
| resting_place = [[எம். ஜி. ஆர் நினைவிடம்|பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம்]]
| profession =
நடிகை

அரசியல்வாதி

கொடையாளர்

| awards =
[[மதிப்புறு முனைவர் பட்டம்|கௌரவ டாக்டர் பட்டம்]] (1991)

[[கலைமாமணி விருது|கலைமாமணி]] (1972)

| signature =

வரிசை 77:
[[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம் ஒன்றில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்ஜிஆருடன்]] ஜெயலலிதா]]
=== அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ===
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. தி. மு. க.]] வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.

=== மாநிலங்களவை உறுப்பினர் ===
அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.]]<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான [[கா. ந. அண்ணாதுரை]] அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref>

=== அணித்தலைவர் ===

[[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனின்]] மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி [[ஜானகி இராமச்சந்திரன்]] தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது. <ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>

=== பொதுச்செயலாளர் ===
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/images/pdf/impressions/december/27dec1987.jpg|title=தினமணி|publisher=}}</ref>

=== எதிர்கட்சித்தலைவர் ===
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த [[ம. நடராசன்]] மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்” என்று கூறிச்சென்றார்.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>

=== முதல்வர் ===
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் [[கே. செங்கோட்டையன்]] விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

==== மகாமக விபத்து ====
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள். <ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>

==== வளர்ப்புமகன் திருமணம் ====
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி [[வி. கே. சசிகலா|சசிகலாவுக்கு]] அக்கா மகனான [[வி. என். சுதாகரன்|சுதாகரன்]] என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார். <ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref>

== சிறையில் ==
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> ஆனால், ஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.

== சட்டமன்றப் பொறுப்புகள் ==
வரிசை 393:
[[பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படதமிழ்நாட்டு நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது